பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் வாழ்வு. காற்றடித்தாற்போச்சுது. தோட்டத்தில் பழமிருக்க, தூரப்போவானேன்? தோட்டத்துநரி, கூட்டத்தில் வருமா? தோட்டப்பாய் முடை கிறவனுக்கு. தூங்கப்பாயில்லை. தோட்டி போலுழைத்து, துரைபோலச் சாப்பிடவேண்டும். தோணடக்குறுணி, துறுக்கமுக்குறுணி. தோலிருக்கச், சுளைவிழுங்கி. தோழமையோடு, ஏழமைப்பேசேல். தோளிலிருந்து, செவியைக் கடிக்கிறதா? தோரணி கெட்டால், கோரணி. தோற்பது கொண்டு. சபையேறுகிறதா? நகமுஞ்சதையும்போல, வாழுகிறன். நகைக்கு மகிழ்ச்சி. நட்புக்கும் நஞ்சு. நகைத்திகழ்வோனை, நாயென நினை. நக்கத்தவிடுமில்லை. குடிக்கத்தண்ணியுமில்லை. நக்கவார கச்ச வடம்போல. நக்குகிற நாய்க்கு, செக்கென்றும். சிவலிங்கமென்றும் தெரியுமா? நச்சுமரமானாலும், நட்டவர்கள் வெட்டுவாரா? நச்சுமரமானாலும், வைத்தவன் தண்ணீருற்றுவான். நச்சுவாயன் வீட்டிலே, நாறுவாயன் குடியிருந்தாற்போல. நஞ்சுக்குள்ளிருந்தாலும் நாகமணி, குப்பைக்குள்ளிருந் தாலுங் குன்றிமணி. நடக்கிறது நடக்கட்டும். தெய்வமிருக்கிறது. நடக்கிறபிள்ளை தவறுகிறது. தாயார் செய்த தருமம். நடக்குங்காற்றவறுவதிலும், நாதவறுதல் கெட்டது. நடக்குங்காலிலே சீதேவி, இருந்த காலிலே மூதேவி. நடந்த பிள்ளை , நகருகிறது. நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை. நடவாத காரியத்தில், பிடிவாதம் பிடிக்கிறது. நடவுக்குத்தெளி, நாலத்தொன்று. நடுச்செவியில், நாராசங்காச்சி விட்டாற்போல. நடுத்தெருப்பிச்சைக்கு. நாணையம் பார்க்கலாமா? 128