பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரி இடத்திலே போகிறதெப்படி, வலத்திலே போகிற தெப் படி மேலே விழுந்து கடிக்காமல் போகிறது உத்தமம். நரியின் கையிலே, குடல் கழுகக் கொடுத்தாற்போல. நரி யெதிர்த்தால் சிங்கம். நரியை, வெள்ளரிக்காய் மிரட்டினாற்போல. நரி வாயைக்கொண்டு, கடலாழம் பார்க்கிறதுபோல. நரைத்தமயில் கறுத்து, நங்கை நாச்சியார் கொண்டை முடிப் பானாம். நல்லது கெட்டால், நாய்க்கும் வழங்காது. நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. நல்லது தெரியுமா. நாய்க்கு. நல்லது நாற்கலம், ஊத்தைப் பதின் கலம். நல்ல நாச்சியார் கடைந்தமோர், நாழி முத்துக்கு நாழிமோர். நல்லபாம் பாடுதென்று. நாகப்பாம்புங் கூடவாடுகிறது. நல்ல பாம்பை யாட்டுகிற பிடாரன், நாகப்பாம்பைக் கண்டு பயப்படுவானா? நல்ல மரத்திலே. புல்லுருவி பாய்ந்தாற்போல. நல்ல மாடானால், உள்ளூரில் விலையாகாதா? நல்ல மாட்டிற் கொரு சூடு, நற் பெண்சாதிக் கொருவார்த்தை. நல்ல மாட்டிற் கோரடி, நல்ல பெண்ணுக்கு ஒருசொல், நல்லவர் கண்ணில், நாகமகப்பட்டாலும், கொல்லார். நல்லவனுக் கடையாளம், சொல்லாமற் போகிறது. ! நல்ல விடென்று பிச்சைக்கு வந்தேன், கரியை வழித்து கன்னத் திலே தடவினார்கள். நல்லவெழுத்து நடுவேயிருக்க, கொணவெழுத்து குறுக்கே போட்டதென்ன? நல்ல வேலைக்காரன், ஆற்றோடே போகிறான். நல்லாயிருந்தது தாதரே, பல்லையிளித்துக்கொண் டாடினது. நல்லாரைக்கண்டால் நாய்போல, பொல்வாரைக் கண்டால் பூனை போல. நல்லாரை நாவிலுரை, பொன்னக் கல்லிலுரை. நல்லுடலுக் கிளைப்பாற்றிக் கொடாவிடிலும், நாவிற்குக்கொடு நல்லோர் நடக்கை, தியோர்க்குத் திகில் நற்சிங்கத்துக்கு. நாயா முடி சூட்டுகிறது. 130