பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமில்லாத சிறிக்கிக்கு, நாலுதிக்கும் வாசல். நாணிக்கொண்டு சாகச், சாண் கயிறு பஞ்சமா? நாணுங்கால் கோணும், நடக்குங்கா லிடனும். நாதிக்காரன், பாதிக்காரன் போல. நாமொன்று நினைக்கத், தெய்வ மொன்று நினைத்தது. நாயடிக்கச். குறுந்தடி வேணுமா? நாயறியுமா, ஒரு சந்திப்பான. நாயா சிங்கத்திற்கு, நற்பட்டங் கட்டுகிறது. நாயாலாகுமா, கொக்கைப் பிடிக்க. நாயும் வளர்த்து. நரகலும் வாருவானேன் . நாயைக்கண்டால் கல்லைக்காணோம், சுல்லைக்கண்டால் நாயைக் காணோம். நாயைக்கண்டு, காகங்கரைக்கிறதா? நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால், வால் குழைத்துக் கொண்டு பீதின்னப்போம். நாயைக்கொஞ்சினால், வாயை நக்கும். நாய் கடித்ததற்கும், செருப்பாலடித்ததற்குஞ் சரி. நாய்க்கருக்கவசரம். நாலு மூணுமாய்ப் பாடு. நாய் குலைத்து, நத்தம் பாழாகுமா? நாய்க்கு. நரிக்குணம். நாய்க்கு. முழுத்தேங்காய்த் தகுமா? நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை. நாய்க்கொருசூல், அதற்கொரு மருத்துவச்சியா? நாய்க்கொரு அலுவலுமில்லை, ஊசென்று உட்கார நேரமுமில்லை நாய் வாய்ப்பட்ட தேன். நல்லதாமா? நாய்நக்கிச், சமுத்திரம் குறையுமா? நாய்ப்பட்டபாடு, கொம்புக்குத் தெரியும். நாய்வாலக், குணக்கெடுக்கலாமா? நாய்வால், சிலைபோல. நாய்வாயைப்பற்றி, ஆற்றிலிறங்கலாமா? நாய் வாழ்ந்தென்ன, புக்ன தாலியறுத்தென்ன? நாய் விற்றகாசு. குலைத்துக்காட்டுமா? நாய்வேஷம் போட்டால், குலைக்க வேண்டும். நாரதா, கலகப்பிரியா நாற்பது வயதுக்குமேல், நாய்க்குணம். நாலடியடித்துப், போர் மேற் போட்டாச்சுது. நாலாறு கூடினாற். பாலாறு. 3. சிலக்கெடுக்க தெரியும் 132