பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் வந்தேன். மாமியார் வீட்டு நாற்றமும் போச்சுது. நான் கண்ணாரக்கண்டேன். நாராயணக் குழம்பு வேண்டாம். நான் பட்டபாடு, நாய்தானம் படாது. நான் பிடித்த முயலுக்கு, இரண்டுகால். நான் போனால் சண்டைவரும், எங்கக்காள் போனால், மயிரைப் பிடித்திழுத்து வருவாள். நிகத்தாலே கிள்ளு கிறதை, கோடாலிகொண்டு வெட்டப் பார்க்கிறான்.) நிகமும் சதையும் போல. நிசங்கனுக்கு. கோட்டை முத்திகை. நிசாமல்லு தண்டில், நிசார்க்காரனைக் கண்டதுண்டா? நித்தியகண்டம், பூர்ணயசு. நித்தியங் கிடைக்குமா. அமாவாசைச்சோறு. நித்திரை சத்துரு. நேரிழை சத்துரு. நித்திரையிலும் தண்ணீர்பால் குடிக்கிறதில்லை. நிமிஷநேரம், நீடியவின்பம். நிமிர்ந்து போட்டதென்ன. குனிந்தெடுத்ததென்ன? நிருபனானபோதே. கருவமெத்தவுண்டு. நிருவாண தேசத்தில், நீர்ச்சீலை கட்டினவன் பயித்தியக் காரன். நிலத்தினால் நீரின் தன்மை குன்றினாற்போல. நிலையிலான் வார்த்தை, நீர்மேலெழுத்து. நிலையை விட்டால், நீச்சு நில்லாத காலடி, நெடுந்தூரம் போகும். நிழலரிது. முசுடு பொல்லாது. நிழல் ஆமை, வெய்யிலிலே போனால் தெரியும். நிழல் கடக்கப், பாயலாமா? நிறை குடம் தளும்பாது. நிறைந்த ஆற்றிலே, பெருங்காயம் கரைத்தாற்போல. நிற்க சீவனில்லாமற்போனாலும், பேர் நிரப்புக்கட்சி. நினைத்த நேரம், நெடுமழை பேயுமா? 134