பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடையேறியும். ஏடு கைவிடேல். பாட்டி கெட்டிக்காரி, பதக்கைப்போட்டு முக்குறுணி யென்பாள். பாட்டுப்போன வெட்டவெளியிலே, வீட்டைக் கட்டுவானேன். பாட்டு வாய்த்தால், கிழவியும் பாடுவாள். பாட்டுக்கழுவார் பணிக்கழுவார் வையகத்தில், பாக்குக்கழுத பாரதத்தைக் கண்டதில்லை. பாதகர் பழக்கம். பாம்பொடு பழகல்போல. பாதிச்சுரைக்காய் கறிக்கும். பாதிச்சுரைக்காய் விதைக்குமா? பாதிப்பாக்கை கப்பலிலேபோட்டு, பங்குக்கு நின்றனாம். பாப்புக்கு மூப்பில்லை. பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே. பாம்பின் வாய்த் தேரைபோல. பாம்புக்குச் சத்துரு பஞ்சமா? பாம்புக்குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும், படு விஷத்தைகொடுக்கும். பாம்புக்குட்டிக்கு விஷம், பாலடைவைத்துப் புகட்டவேணுமா? பாம்புக்குத் தலையைக்காட்டி, மீனுக்கு வாலைக்காட்டுகிறது. பாம்புக்குப்பாம்பு விஷமுண்டா? பாம்புக்குப் பால் வார்த்தாற்போல. பாம்புக்கு விஷம் பல்லிலே, பரத்தைக்கு விஷ முடம்பெங்கும். பாம்பும் கீரியும்போல, பலகாலம் வாழ்ந்தேன். பாம்பு தன்பசியை நினைக்கும், தேரை தன்விதியை நினைக்கும். பாம்புபகையும், தோலுறவுமா? பாம்பென்றாற் படைநடுங்கும். பாயைச்சுருட்டடி, பிள்ளையையிடுக்கடி, பரதேசம்போக. பாய்மரஞ்சேர்ந்த, காகம்போலானேன். பாய்மர மில்லாத கப்பலைப் போல. பாரபுத்தியுள்ளவை, பதராற் பிடிக்கப்பட்டது. பாராதகாரியம். பாழு. பார்க்க பதினாயிரங்கண் வேண்டும் . பார்க்கிற கண்ணுக்கு, கேட்கிறசெவி பொல்லாது. பார்க்கிறபார்வையும், தேய்க்கிற, தேய்ப்பும் நானறிவேன், பார். பார். தேய், தேய். பார்த்தகண்ணும், பூத்துப்போயிற்று. 146