பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்த முகமெல்லாம். வேற்றுமுகமா யிருக்கிறது. பார்த்தவர்க்கின்பம், படுபவபர்க்குத் துன்பம். பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தாற் புலிபோல. பார்த்தாற்தெரியுமா. பட்டால் தெரியுமா வருத்தம்? பார்த்திருக்கத்தின்று. விழித்திருக்கக் கைகழுவினான். பார்த்திருந்தும் பாழும் கிணற்றில் விழுந்தாற்போல. பார்ப்பாத்தியம்மா. மாடு வந்தது. பார்ப்பார் சேவகமும். வெள்ளைக்குதிரை சேவகமுமாகாது. பார்ப்பானுக்கு வாய்போக்காதே. ஆண்டிக்கு அதுதானுஞ் சொல்லாதே. பார்ப்பானுக்கு வாய்ப்போக்கு, ஆண்டிக்கதுதானுமில்லை. பார்ப்பானேழையும். பசுவேழையுமுண்டா? பார்ப்பான் கறுப்பும், பறையன் சிவப்புமாகாது. பாலனும், பால் குடியாது. பாலாமுய், நெய்யாமுய்ப், போட்டவன் தலைக்குப் பாக்குப் பிடிக்கிறது. பாலாருடையான். விருந்துக்கஞ்சான். பாலானநெஞ்செல்லாம். பகையாக்கினான். பாலிருக்கிறது. பாக்கியமிருக்கிறது. பாலிலேபோட்டுக் குடிக்க பத்துபருக்கைக்கு வழியில்லை. பாலுக்குங்காவல், பூனைக்குந்தோழன். பாலுக்குமிஞ்சின சுவையுமில்லை, பல்லாக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை. பாலுக்கு வந்தபூனை, மோரைக்குடிக்குமா? பாலுஞ்சோறுமாய்த்தின் கிற பாளையக்காரன், மேட்டு வளையை எண்ணுகிறது போல. பாலுடன் கூடிய, நீர்போல- பாலுந்தேனும் சேர்ந்தாற்போல. பாலைப்பார்க்கிறதா, பானையைப்பார்க்கிறதா? பாலைப்பார்த்து, பசுவைக்கொள்ளு. பாலைப்புகட்டலாம். பாக்கியத்தைப் புகட்டலாமா? பால் குடிக்கப்பாக்கிய மில்லாவிட்டால், விலைக்கு வாங்கினா லும் பூனை குடித்து விடும். பாலை வார்த்து, தலையை முழுகு. பாலையும் சோற்றையும் குழந்தைகள் பாச்சினோர் கேட்பது போல. 147