பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்சுடுகிறதென்று ஊதிக்குடிப்பார்கள். மோர் சுடுகிற தென்று ஊதிக்குடிக்கிறேன். பால்சுண்டினாலும், சுவைசுண்டுமா? பால்சட்டிக்குப் பூனையைக் காவல்வைத்தாற்போலே. பால் பொங்கினால், பால் சட்டியிலே. பால்வார்த்த சோற்றுக்குத்தான், பழத்தைப்போடுகிறது. பாவட்டம் பூப்போல் நரைத்தும் புத்தியில்லை. பாவத்திற் கிடங்கொடாதவன், பாவத்தை செயங் கொள்வான். பாவந்தோன்றிய நாள் முதல், தோன்றியபழையோன். பாவமோரிடத்திலே, பழியோரிடத்திலே. பாவம் போகப், பாலவார்த்து முழுகு. பாவிகொடுமை. பாலும் புளிக்கிறது. பாவிபாவம், பதராய் விளைந்தது. பாவிலிருக்கிறது. பார்த்துமிருக்கிறது. பாழடைந்த பழங்குட்டிச் சுவர்போல், பாழாய்ப்போகிறது. பசுவின் வயிற்றிலே. பாழுருக்கு. நரிராஜா. பாற்கடலக்குடிக்கப், பார்த்திடும் பூகனபோல. பானுவைக்கண்ட பனிபோல. பானை சோற்றுக்குப், பத மொருசோறுதான். பானையிலிருந்தாலல்லவா. அகப்பையில் வரும். பாணயோடேதின்று பறையனோடே போகிறார்களா? பி பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு, அடுப்பு முட்டாமல் விடு கிறதா? பிச்சைக்காரனை அடித்தானாம். அடுப்பங்கரையிற் பேணனாம். பிச்சைக்காரனை அடித்தானாம். செம்பைப் போட்டுடைத்தானாம் பிச்சைக்காரனைப் பேய்பிடித்ததாம், உச்சியுருமத்தில். பிச்சைக்காரன் சோற்றில், சனிபுகுந்ததுபோல. பிச்சைக்காரன் மேல், பிரமாஸ்திரந் தொடுக்கிறதா? பிச்சைக்குடி பெரிய குடி. பிச்சைகுப் பிச்சையுங்கெட்டுது. பின்னையுமொரு காசுநாமமுங் கெட்டுது. பிச்சைக்கு முத்தது. கச்சைவடம். பிச்சைக்குவந்த ஆண்டி. இல்லையென்றாற் போவானா? 148)