பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமச்சாரி ஒடம், கவிழ்த்தாற்போல, பிரமதேவன் போட்ட புள்ளிக்கிரண்டாமா? பிரமா நினைத்தால், ஆயிசு குறையுமா? பிராமணா, உன்வாக்குப் பலித்தது. பிரிந்தகன்றைத் தேடி, திரும்பும் பசுவைப்போல. பிலாப்பழத்திலே, மொய்த்த ஈப்போல. பிழக்கடைமருந்து. கவைக்குதவாது. பிழைக்கப்போன விடத்திலே, பிழைமோசம் வந்ததுபோல. பிழைக்கிறபிள்ளை, இந்த கழிச்சல் கழியுமா? பிழைக்கிறப்பிள்ளையைக் காலக்கிளப்பிப் பார்த்தாற் றெரியாதா? பிள்ளைக்காரன் பிள்ளைக்கழுகிறான், பணிசெய்வோன், காசுக் கழுகிறான். பிள்ளைக்கா. புழுக்கைக்கா, இடங்கொடுக்கப் போகாது. பிள்ளைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குப் பிராணசங்கடம். பிள்ளைச்சர், கொள்ளக் கிடைக்குமா? பிள்ளைத் தவத்திற்குப் போய், புருஷனைப் பறிகொடுத்தாளாம். பிள்ளைபதினாறு பொறுவாளென் றெழுதியிருந்தாலும், புருஷ னில்லாமல் எப்படி பெறுவாள்? பிள்ளை பெற்ற வயிறோ. நெல்லெடுத்த குழியோ? பிள்ளைப் பெற்றவளைப்பார்த்து, பெருமூச்சு விட்டாவ தென்னா பிள்ளைப் பெற்றவனுக்கும், மாடு படைத்தவனுக்கும். வெட்க மில்ல . பிள்ளைப்பெற்று. பேரிடவேணும். பிள்ளைப்பேறு பார்த்ததும் போதும், என்னாம்பிடையாகனக் கட்டியணைத்ததும் போதும். பிளிகா மலபா தை செய்ததென்று. தொடையை யறுக்கிறதா? பிள்ளை அருமை. பெற்றவளுக்குத் தெரியும். பிள்ளையருமை. மலடியறிவாளா? 150