பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாண்டான் கெட்டிக்காரன், பொழுது போனாற் கண் தெரியாது. பிள்காயார் கோவிலிலே கள்ளனிருக்கிறான், சொன்னாலுங் கோள் போலிருக்கும். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது. பிள்ளையாருக்குப் பெண்கொள்வது போல. பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக்காணோம். தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக்காணுேம். பிள்ளையாரைப் பிடித்தசனி, அரசமரத்தையும் பிடித்தாற் போல. பிள்ளையில்லாத பாக்கியம், பெற்றிருந்தென்ன சிலாக்கியம். பின்களயில்லாத வீட்டுக்கு, கிழவன் துள்ளிவிளையாடுகிறான். பின்காயின் மடியிலே பெற்றவன் உயிர்விட்டால், பெருங் கதியுண்டு . பிள்ளையுங்கிள்ளி, தொட்டிலும் ஆட்டுகிறது. பிள்ளையைச் சாக்கிட்டுப், பூதம் விழுங்குகிறது. பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால், பாதி விவாகம் முடிந்தாற் போல. பிறக்கிறபொழுதே முடமானால், பேய்க்குப்படைத்தால் தீருமா? பிறர் குற்றமறியப், பிடரியிலே கண்ணு . பிறந்த பிள்ளை பிடி சோற்றிக் கமுகிறது. பிறக்கப்போகிற பின் களக்குத் தண்டைச்சதங்கை தேடுகிறார்களாம். பிறந்த காருக்குக்குச் சேலைவேண்டாம், பெண்டிருந்த ஊருக்குத் தாலி வேண்டாம். பிறந்த ஊருக்குப் புடவை வேணுமா? பிறந்தவிடத்து வண்மையை, உடன் பிறந்தாளிடத்திற் சொல்லு கிறதா? பிறர்பொருளை இச்சிப்பவன், தன் பொருளிழப்பான். பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான். பிறவிக்குருடனிரடு, பெலத்த முடிச்சாயிருக்கும். பிறவிக்குருடனுக்குத் தெய்வங் கண்கொடுத்தாற்போல. பிறவிச்செவிடனுக்குப் பேசத்திறமுண்டா? பின்குடுமி, புறங்காலில் தட்ட ஓடுகிறது. பின்புத்திக்காரன், பிராமணன். பின்னால் வரும் பிலாக்காயினும், முன்னால் வரும் கிளாக்காய் நலம். பின்னை யென்பதும், பேசாதிருப்பதும் இல்லையென்பதைற் கடை யாளம். 151