பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்டிப்புரட்டி யுதைக்கிறது போதும், மீசையில் மண்பட வில்லை யென் கிறான். புலிகுத்தின சூரியென்று கையிலெடுத்தாலும் போதும், பூனை குத்தின சுளுக்கியென்று கையிலெடுத்தாற் பெருமையா? புலிக்காட்டிலே, புகுந்தமான் போல. புலிக்குத் தன் காடு, வேற்றுக்காடுண்டா? புலிக்குப் பயப்பட்டபேரெல்லாம். பொட்டவந்தென்பேரில் படுத்துக்கொள்ளுங்கள். புலிக்குப் பிறந்து. பூகனயாய்ப் போகுமா? புலிபசித்தாற் புல்லைத்தின்னுமா? புலிபதுங்குகிறது. பாய்ச்சலுக் கடையாளம். புலிமேவெடுத்தக் கத்தியைப், பூனையின்பேரில் வீசுகிறதா? புலியும் பசுவிம், பொருந்தி வாழ்ந்தாற்போல. புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன், நரியூரும் புலி யூராய்ப் போயிற்று. புலியைக்கண்டு, பூனை யெதிர்க்குமா? புலியைப்பார்த்து, நரி சூடிக்கொண்டது போல. புலையனுக்கு. பூமுடி பொறுக்குமா? புலயுங் கொலையுங், களவுந்தவிர். புல்லர்க்கு நல்லோர் சொன்ன, பொருள்போலாய்விட்டது. புல்லாகளச்செய்து, கொல்லையில் வைத்தாற்போல. புல்லும் பூமியுங் கல்லுங்காவேரியு முள்ள மட்டும். எந்நிலத்தை அனுபோகம்பண்ணு. புல்லுள்ள விடத்திலே மேய்ந்து, தண்ணீருள்ளவிடத்திலே குடிக்க வொட்டாது. புல்லைத்தின்னும் மாடுபோல, புலியைத் தின்னும் செந் நாயுதவுமா? புழுக்கச்சிமேற் சன்னதம்வந்தால், பூவிட்டுக்கும்பிடவேணும். புழுக்கை, கலங்கழுவி யுண்ணாது. புழுக்கைக்குப் பொன்முடி, பொறுக்குமா? புழுக்கைக்குணம். போகாதொருக்காலும். புழுக்கை யொழுக்கமறியுமா, பித்தளை நாற்றமரியுமா? புழுத்தசரக்கு. கொழுத்தபணம். புவயங்காய்க்குப் புளிப்பு, புகுதவிடவேணுமோ? புளியங்கூடும். பழமும்போல. புளியமரத்திலேறினவன், பற்கூசினாலிங்குவான்- புளிய மரத்திலேறினவன். நாக்கெரிவுகாணுமுன் னிறங்கு வானா? 153