பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணுக்குப் பெண்தான், சீதனம். பெண்ணுக்குப் பொன்னிட்டுப்பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார். பெண்ணுக்குப் போய், பொன்னுக்கப் பின்வாங்கலாமா? பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும். பெண்ணுக்கும் பொன்னுக்கும், தோற்புண்டா? பெண்ணுமல்லாமல் ஆணுமல்லாமல், பெருமரம்போல் வளர்கிறது. பெண்ணென்றால், பேயுமிரங்கும். பெண்ணென்று பிறந்தபோதே, புருஷனும் பிறந்திருப்பான். பெண்ணைக் கட்டிக்கொடுப்பார்கள், பிள்ளைப் பெறுவதற்குப் பிணைபடுவார்களா? பெண்ணைக் கொடுத்தவளோ, கண்ணைக்கொடுத்தவளோ? பெண்கணக்கொண்டு பையன் பேயானான், பிளகாயைப் பெற்றுச் சிறுக்கிநாயானான். பெண்ணைத் திருத்தும், பொன். பெண்ணைப்பற்றி, பீயைத்தின்னு. பெண்ணோடு ஆணோடு, பிறக்காத பெரும்பாவி. பெண்படையும் பலமும், பெருக்கத் தவிக்கிறதோ? பெண்புத்தி, பின்புத்தி. பெண்புத்தி, பீதின்னப்போம். பெண்மூப்பான வீடு, பேரழிந்துபோம். பெரியவர்கள் தின்றால் பலகாரம், சின்னவர்கள் தின்றால் நொறுவு. பெரியவடென்று பிச்சைக்குப் போனேன், கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். பெரியார் பெருந்தலை, பேய்த்தலைக்கு நாய்த்தலை. பெரியோர்களுள்ளம். பேதிக்கலாகாது. பெரியோர்ககக்கண் டெழுந்திராதவன், பிணம். பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால், எப்பொருளும் பேதிக்கும். பெருங்கயிறு. முடியழுந்தாது. பெருங்காயமிருந்த, பாஎன்டம் போல. பெருங்கொடை, பிச்சைக்காரருக்குத் துணிவு. பெருத்தமரங்கள் வைத்தவன், உருக்கமாயத் தண்ணீர் வார்ப்பான். பெருநெருப்பிலே. புழுமேயுமா? 156