பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருநெருப்புக், கீரமுண்டா ? பெருமரத்தைச் சுற்றின, வள்ளிக்கொடிபோல. பெருமாளிருக்கிற வரையில், திருநாளுண்டு. பெருமாளென்கிற பேரைமாற்றப், பெரிய பெருமாளாச்சுது. பெருமான் செல்லும் வழியிலே, புல்லாய் முளைத்தாலும் போதும். பெருமானைச் சேர்ந்தோர்க்குப் பிறப்பில்லை, பிச்சைக் சோற்றிற்கு எச்சிலில்ல. பெருமைகண்டவர், சிறுமைகண்டாலல்லது தேமுர். பெருமையொருமுறம், புடைத்தெடுத்தாலொன்றுமில்ல. பெருவயிறு கொண்டதறியாமல், சீமந்தந்திற்கு நாளிட்டுக் கொண்டானாம். பெருவயிறு கொண்டவனுக்குக் காரியுமிழ்ந்த தாதாயம். பெருவாரிக் கழிச்சலிலே. தப்பிப்பிழைத்தவன் நாட்டாமைக்காரன். பெருவெள்ளம் பாயுங்கடலிலே, பீவாய்க்காலும் பாயும். பெற்றதாயிடத்திலேயா, கற்றவித்தை காட்டுகிறது. பெற்றதாயை, பெண்டுகழைக்கிறதா? பெற்றதாய்க்கும் வளர்த்ததாய்க்கும் உதவாமல், பிரிந்த குயிலைப்போல. பெற்றதாய் செத்தால், பெற்ற அப்பன் சிற்றப்பன். பெற்றதாய் பசித்திருக்க, பிராமணபோசனஞ் செய்தது போல. பெற்றதெல்லாம் பிள்ளையா. இட்டதெல்லாம் பயிரா? பெற்றபின்கள துடையிற்பேணால், என்ன செய்யலாம்? பெற்றமனம் பித்து. பிள்ளைமனங் கல்லு. பெற்றவளுக்குத் தெரியும், பின்காயருமை. பெற்றாலும் பிள்ளை நாயகம், நட்டாலுந் தில்லை நாயகம். பே பேசப்பேச, எந்தப்பாக்ஷையும் வரும். பேசப்போகிறாயோ, சாகப்போகிறாயோ? பேசாதிருந்தாற். பிழையொன்றுமில்லை பேச்சுகொடுத்தும். பேச்சுவாங்குகிறது. 157