பொட்டிமுறித்த பயலுக்கு. சட்டையுந் தலைப்பாகையும் பார். பொட்டியிலடங்கின. குட்டிப்பாம்பு போல. பொட்டியு முடியும், பிளந்தாற்போல. பொதிக்களக்கிறதற்கு முன்னே. சத்தத்துக் களக்கிறதா? பொய் கிடந்து புலம்புகிறது. மெய் கிடந்து முழிக்கிறது. பொய்சொன்ன வாய்க்குப், போசனமுங் கிடையாது. பொய் பூரணச்சந்திரன், மெய் மூன்றாம்பிறை. பொய், மெய்யை வெல்லுமா? பொய்யான பொருளாசை, மெய்யான அருளாசையை விலக்குகிறது. பொய்யு மெய்யும், நீளத்தகும். பொய்யைச் சொன்னாலும், பொருந்தச் சொல்லவேண்டும். பொருளாசையும், மனச்சாட்சியும், பொருந்துமா? பொருளில்லார்க்கு அருளில்லை. பொருளும் போகமுங் கூடவராது. புண்ணியமே கூடவரும். பொருளுள்ளோர்க்குப் பூலோகம். அருளுள்ளோர்க்கு அந்தலோகம். பொல்லாதகாலம், சொல்லாமல் வந்தது. பொல்லாத குணத்துக்கு, மருந்துண்டா? பொல்லாப் பிள்ளை, இல்லாப்பிள்ளைக்குச் சரி. பொன்னான மருமகளா லும். மண்ணாவோருமாமியார் வேண்டும். பொன்னிரவலுண்டு விரவலுண்டா? பொன்னின் குடத்திற்கு பொட்டிட்டுப் பார்க்க வேண்டுமோ? பொன்னின் குணம்போமா, பூவின் மணம்போமா? பொன்னின் விளக்கானாலும், தூண்டுகோல் வேண்டும். பொன்னுக்கு, பொடியாய் போச்சுது. பொன்னையும் பிடவையும் நீக்கிடில், பெண் மலக்கூடு. பொன்னை யெறிந்தாலும், பொடிக்கீரையை யெறியலாகுமா? 159
பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/165
Appearance