பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடைவாய்க் கொக்குபோல. மட்டாயிருந்தது. மதனி குடிவாழ்க்கை . மட்டான போசனம், மனதிற்கு மகிட்சி. மட்டிப் பயலுக்கு, துட்டக் குருக்கள். மட்டியிலும் மட்டி, மகாமட்டி. மட்டில்லாமற் கொடுத்தாலும். திட்டுக்கேட்கலாகாது. மட்டையிடம், குட்டிவலம். மணலைக் கயிருய்த் திரிக்கிறது. வானத்தை வில்லாய் வளைக் கிறது. மணலையளவிட்டாலும், மனதையளவிடக் கூடாது. மணற்சோற்றிலே, கல்லாய்ந்தாற்போல. மணியக்காரன் வீடுபோல, வயிறு பற்றிக்கொண்டெரிகிறது. மணியாம் பருக்கை போட, மகிழ்ந்த கடனைப்போல. மணியென்ன? அறுந்துவிழுந்தால் இரண்டு. மகணயிற்பெண்கண மாத்திவைக்கிறது. திண்ணையிற்பெண் கணத் திருப்பிவைக்கிறது. மண்காசுக்கு, சாம்பல் கொழுக்கட்டை. மண்குதிரையை நம்பி, ஆற்றிலிறங்கினதுபோல. மண்டைக்குக் தகுந்த, கொண்டைபோடவேண்டும். மண்டையிலெழுதி, மயிரால் மறைத்து வைத்தது போல. மண்டையுள்ள மட்டும், சளி பற்றமுது. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு. எருமுட்டைப் பணியாரம். மண்ணாப்போவான் காலம் , கண்ணமண்ணா தெரியவில்லை. மண்ணிலிருந்து, வழக்கோரஞ்சொல்லாதே. மண்ணிலே பிறந்து, மண்ணிலேவளர்ந்து. மண்ணுக்கிரை யாய்ப் போகிறது. மண்ணைத்தின் முலும், மறையத்தின்னு. மண்தனையாண்ட மன்னவர்களெத்தனையோ? மண்பிள்ளையானாலும், தன் பிள்ளையா யிருக்கவேண்டும். மண்புனை யெலிபிடிக்குமா, மதிகெட்ட இராசாவே? மதனனும் இரதியும்போல. வாழ்ந்திருக்கிறது. மதியாதான் வாசலிலே வல்லிருளேயானாலும், மிதியாமலிருப் பதே கோடி பெறும். மதில் மேலிருக்கிற பூனைபோல. மதுபிந்து. கலசம்போலிருக்கிறது. மதுரையில், பூசினியைக்காய் மாட்டுவிலை. மத்தகத்தில் யானை, மண்ணவாரி போட்டுக்கொண்டாற் போல. மத்திட்ட தயிர்போல், புத்தி குழம்புகிறது. 162