பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரமேறிக் கைவிட்டவன் போல. மரமேறுகிறவன் சூத்தை. எத்தனை தூரந் தாங்குகிறது. மரம் வைத்தவனுக்குத் தண்ணீர் வாரர்கக்கடன். மரம் வைத்தவன், தண்ணீர் வார்ப்பான். மரியாதை யில்லாதான், மகிமையற்முன். மரியாதை ராமன், வழக்குத் தீர்த்தாற்போல. மருண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய். மருந்தும் விருந்து. மூன்று பொழுது. மருமகனோடு உண்ணவில்லை யென்கிறார்களென்று. மாமியார் வார்த்த நெய்யைப் பரட்டியுண்டாளாம், மாமியாரைக் கட்டவில்லையென்கிறார்களென்று. மருமகன் தன் அரைஞாண் கயிற்றை யறுத்துத் தாலிகட்டினானாம். மருவில் உண்ட சாப்பாட்டை, லங்கணத்தில் நினைத்துக் கொண்டது போல. மருவும் மலரும்போல. மரைக்காயருக்குமுண்டு. மாட்டுப்புத்தி. மரைக்காயர்வட்டு, மரைக்காயர்? மலடிக்குத் தெரியுமா, மகப்பெறுவருத்தம். மலடியைப் பிள்ளைபெறச்சொன்னால், பெறுவாளா? மலரும் மணமும்போல. மலர்த்தேனை வண்டல்லால், மண்டு கங்குடிக்குமா? மலிந்த பண்டம் கடையிலேவரும். மலிந்தபண்டங்கொள்ளாத, வணிகன் பதர். மலைகலங்கினாலும், மனங்கலங்கப்போகாது. மலைகெல்லி, எலிபிடிக்கிறதா? மலைக்கும் மண்ணாங்கட்டிக்கும், சரியா? மலக்க மலையண்டைக் கொடுத்தாற்போல. மலத்தவர்க்குப் பலன் லபிக்குமா? மலைநெல்லிக்காய்க்கும், கடலுப்புக்கும். உறவுசெய்தவர் யார் ? மலைபோலப் பிராமணன் போகிறானாம், பின்குடுமிக்கு அழு கிமுளாம். மலைபோல் வந்தது. பனிபோல் நீங்கிற்று. மலைப்புளுகு, கலப்புளுகாயிருக்கிறது. 164