பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழையிலேபோட்டாலும் நனைகிறதில்ல, வெய்யலிலே போட்டாலும் காய்கிறதில்லை, மழையும் பிள்ளைப் பெறுதலும், மகதேவர்க்குந் தெரியாது. மழைவிட்டுந் தூவானம் விடவில்லை. மழைவிழுந்தால் தாங்கலாம். வானம் விழுந்தால் தாங்கலாகுமா? மறந்தவுடைமை, மக்களுக்காகாது. மறந்து செத்தேன் பிராணன், வாவென்றால் வருமா? மறுமங்கையர்க்கும் மறுமன்னவர்க்கும். மார்பும் முதுகும் கொடாமலிரு. மறைத்துக்கட்ட மாற்றுப்புடவையில்லை. மற்கடகச்சீனு, மாற்சாலகுருவும். மனக்கவலை, பலக்குறைவு . மனச்சாட்சியைவிட, மறுசாட்சிவேண்டாம். மனதறியாப், பொய்யுண்டா. மனதிலிருக்கும் ரகசியம். மதிகேடனுக்கு வாக்கிலே. மனதிலேயொன்றும், வாக்கிலேயொன்றும். மனதுக்குமனதே சாட்சி, மற்றதுக்குத் தெய்வமே சாட்சி. மனதே. காரணம். மனதைப்போலிருக்கும். மாங்கிலியம். மனந்தடுமாறினால், மாற்றானுக்கு வலிமை. மனப்பால் குடித்து, மாண்டவர் அனந்தம். மனப்பொருத்தமிருந்தால், மற்றப்பொருத்தம் பார்க்கத் தேவையில்லை. மனம்போன போக்குக்கு, வழியில்லை. மனிதன் கையிலே மனிதனகப்பட்டால் குரங்கு. மனுஷன் றலையை மான் றலையாக்குகிறான். மான்றலையை மனுஷன் றலையாக்குகிறான். மனைக்கொடியில்லாத மனை பாழு. மன்மதக் கரட்டோணான். மன்னுயிரையும், தன்னுயிர்போலெண்ணவேணும். 166