பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறத்தாலடிபட்டாலும், முகத்தா லடிபடலாகாது. முன்கை நீண்டால், முழங்கை நீளும். முன்னவனே முன்னின்முல், முடியாத பொருளுண்டோ? முன்னளந்தநாழி, பின்னளக்கும். முன்னாலே பார்த்தாற் சேவகன்குதிரை, பின்னாலே பார்த்தால் செட்டியார்குதிரை. முன்னாலே போனால் கடிக்கிறது. பின்னாலேபோனா லுதைக்கிறது. முன்னாலே இருந்த அதிகாரியை, பின்னாலேவருகிற அதிகாரி நல்லவனாகச் செய்கிறது. முன்னாள் செய்ததவத்தாலே, மூன்று மயிர்தந்தோமே, இன்னாள் செய்ததவத்தாலே, இருந்த மயிரு மிழந்தாயே . முன்னே போனால் சிசுவத்தி, பின்னே போனால் பிரமத்தி. முன்னேவந்தகாதைப்பார்க்கிலும் பின்னேவந்த கொம்புபலம். முன்னோக்கிப்போ. முசுட்டை குழகுழப்பு. மூக்கறுப்பட்ட மூளி, காதறுப்பட்டமூளியைப் பழித்தாளாம். முக்குப்புண்ணாறி யல்லவோ, தாசரியாகவேண்டும். மூக்குமயிர் பிடுங்கினது போல, வருத்தம் வரும். மூக்கைப் பிடித்தால், அண்ணாந்து பார்க்கவிட மில்லை. மூக்கைப் பிடித்தால், சீவன் போகிறது. மூங்கில் இலைமேலே, தூங்கும் பனிபோலே. மூடினவுடமை முன்றுலோகம் பெறும். முடாதவுடமை முக்காற் காசும் பொது. மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள் தான். ஓடியோடி மாப் பிள்ளை கொள்ளுகிறது. மூட்டைக்காரனுக்கு, முழங்காலிலே புத்தி. முத்தது மோழை, இளையது காளை . மூப்பிலும் தருமஞ்செய்தல் முயற்சி மூப்புக்குச் சோறும், முறத்துக்குச் சாணியும். மூலிகையறுத்தால், மூன்றுலகமாளலாம். 172