பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்க்கரோடிணங்கினால், ஏர்க்கவேணு மவகீர்த்தி. மூர்க்க னும், முதலையும் சரி. மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது. மூன்றடியுமடித்து, போர்மேலேயும் போட்டாச்சுது. மூன்றங்கட்டவிழ்த்தாற் றெரியும். மூன்றுகாசுக் குதிரை. ஆறுகாசு வைக்கல் தின்றுதாம். மூன்றுமுழமும் ஒருசுற்று, முப்பதுமுழமும் ஒரு சுற்று. மூன்று வீட்டுக்கு முக்காலி, நாலு வட்டுக்கு நாற்காலி. மூன்றே முக்கால் நாழிகையில் முத்து மழை பேய்ந்தது. வாரி யெடுப்பதற்குள்ளாக, மண்மாரியாய்ப் போயிற்று. மெ மெச்சிக்கொள்ளுகிறதற்கு. எச்சிலையெடுக்கிறது. மெஞ்ஞான முடையார்க்க, அஞ்ஞானமில்லை. மெத்தப் படித்தவன், பயித்தியக்காரன். மெத்தப் பரிச்சலாம். உள்ளே யெரிச்சலாம். மெத்தை நேத்தி, தலகாணி பீத்தல். மெய்க்கும் பொய்க்கும், விரல் கடைதூரம். மெய்சொல்லி வாழாதான், பொய்சொல்லி வாழ்வானா? மெய்யென்றிருந்தேன். விழித்தேன் கினவாச்சு. மெலுக்கிலே, யலக்கழிவு - மெல்லெனப்பாயுந் தண்ணீர், கல்லையுங் குழியப்பாயும். மெழுகாலே யாகிலும், வெள்ளைத் தலைவேணும். மெழுகு பிள்ளையார்போலே. தொளுவு தொளுவென்றி ருக்கிறது. மெள்ள இருந்து. தள்ளவேனும் பகையை மே மேடுஞ்சரி, பள்ளமுஞ்சரியா? மேய்கிற கழுதையை, கூவுகிறகழுதை கெடுத்ததுதாம். மேய்கிற கோழியை, மூக்கை ஓடித்தாற்போல. மேய்கிற மாடு. கொம்பிலே பில்லு கட்டிக்கொண்டா போகிறது . மேய்த்த நாளக்கு, பால்பீச்சிக் குடித்தது லாபம். மேய்த்தால் கழுதையை மேய்ப்பேன். இல்லாவிட்டால் பர தேசம் போவேன். மேய்ப்பான் கண்ணிலும், உடையவன் பிடரிநலம். மேருவைச் சார்ந்த. காகமும் பொன்னிறம். மேருவை யடைந்த, காகமும் அமிர்தமுண்ணும். மேலான மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான். 173