பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய்திரண்டு வரும்போது. தாழியுடைந்தாற்போல வெண்ணெயிருக்க, நெய்க்கலைவானேன். வெண்ணையுருகுமுன்னே. பெண்கணபெருகும். வெண்ணை வெட்டுகிற, சேவகன். வெதும்பும் பயிருக்க, மேகமிரைந்தாற்போல. வெற்றிலைக்குத் தண்ணியும், வேசிக்கு மஞ்சளும். வெந்தசோற்றைத் தின்று. வந்ததெல்லாம் பிதற்றுகிறான். வெந்தது போதும். முந்தானையிலே கொட்டு. வெந்தபுண், விகனசெய்யாது. வெந்தையமிட்ட கறிக்குச். சந்தேகமில்லை. வெய்யிலிலே போட்டாலும் காய்கிறதில்,ை மழையிலே போட்டா லும் நனை கிறதில்லை. வெய்யலின் முன்னே. மின்மினி பிறகாசிக்குமா? வெல்லஞ் சாப்பிடுகிறவனொருவன். விரலைச்சூப்புகிறவ னொருவனா? வெல்லப்பேச்சு, சொல்லுக்கசையாது. வெளிமழை விட்டாலும், செடிமழைவிடாது. வெளியிலே பார்த்தால் டம்பம். உள்ளே பார்த்தால் ஒக்காளம். வெளியைப்பிடித்துக்கொண்டு, வீராவீராவென்கிறது. வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர் வெளுப்பானுக்கு வெளுப்பான, சாதிவண்ணான். வெள்ளம் பள்ளத்தை நாடும், விதி புத்தியை நாடும். வெள்ளம் வருமுன்னே. அணைகோலிக்கொள்ளவேணும், மிஞ்சிவந்த பிறகென்செய்கிறது. வெள்ளாழன் கிரந்தமும், பார்ப்பான் தமிழும் வழ வழ. வெள்ளாட்டியின் பேரில் சன்னதம் வந்தால், விழுந்து விழுந்து கும்படவேணும். வெள்ளாடு மழையிலே நனை கிறதென்று. வேங்கைப்புலி புரண்டுபுரண்டழுகிறதாம். வெள்ளரிக்காய்வித்த, பட்டணமா? வெள்ளிக்குப் போட்டதும், கொள்ளிக்குப் போட்டதுஞ் சரி. வெள்ளிக்கெதிரே போனாலும், வெள்ளாழனுக்கெதிரே போக லாகாது. வெள்ளிபோட்ட காலுக்கு, வெறும்காலடிமையா? வெள்ளெலும்பை, நாய் கடித்தது போல 187