பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவள் விலை மோரில் வெண்ணையெடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ணுவாள். இவனுக்கும் அவனுக்கும். ஏழு பொருத்தம். இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டங் காட்டுவான். இவன் புத்தி, உலக்கைக்கொழுந்து. இவன் மகா பெரிய கள்ளன், கையாலே முடிந்ததை காலாலே அவிழ்ப்பான். இவன் வாழ்ந்த வாழ்வு, மருகிலேன் மல்லாக்கிலேன்? இழவுக்கு வந்தவள், தாலி யறுப்பாளா? இழவு சொன்னவன் பேரிலேயா, பழி? இழுக்கான பொன்னை, புடத்தில் வைத்தெடுப்பார்கள். இழுக்குடைய பாட்டுக்கு. இசை நன்று இழுப்பும் பறிப்பும். இழுவு பட்ட பாடும். இழுவை கண்டால், அடி பார்ப்பானேன்? இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப் பட்டு. இளங்கன்று. பய மறியுமா? இளமையிற் கல்வி, எப்போதும் நிற்கும். இள வெந்நீர் குளிக்காதவளா. உடன்கட்டையேறப்போகிறான்? இள வெயில் காயாத நீயா. தீ பாயப்போகிருய்? இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி, ஏறியடித்தானாம் தவசி பிள்ளை !! இகாஞனானாலும், ஆடுவான் மூப்பு. இளைத்தவன், எள்ளை விதை. இளைத்தவன் பெண்சாதி. எல்லவருக்கும் மைத்துனி. இகாயாளே வாடி. மலையாளம் போவோம் முத்தாளே வாடி, முட்டிக்கொண்டு சாவோம் ! இறகு கொடு மயிலே யென்மூல், கொடுக்குமா? இருத்தி வைத்துப் பிடுங்கினால் கொடுக்கும். இறக்குங் காலம் வந்தால், பிறக்கும் ஈசெற்கும் சிறகு. இறங்கச்சே நீச்சானால், க.ர யேறுவ தெப்படி? இறந்தவன் பிள்ளை, இருந்தவன் அடைக்கலம். இறந்திருந்து பிறந்தாலும், இருவக் கரையானாய்ப் பிறக்க வேண்டும்.