பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈட்டி எட்டின மட்டுங் குத்தும். பணம் பதிங்காத மட்டுங் குத்தும். ஈட்டுக்கு ஈடுஞ் சோட்டுக்குச் சோடுமா யிருந்தால் வாசி. ஈட்டுக்கும் பாட்டுக்கும், இருந்தாளிடு குமரி. ஈதலுடையோரை, யாவரும் புகழ்வார். ஈந்து பார்த்தால், இம்மி வெளியாகும். ஈப்பிசினி இறப்பது கூட, கக்கிசம். ஈயாத புல்லகன, எவ்விடத்துங் காணோம். ஈயாதார் வாழ்ந்தென்ன, இண்டஞ்செடி தழைத்தென்ன? ஈயா ருடைமையை, தீயார் கொள்வர். ஈயைப் பிடித்தால், கால் வேறு கை வேறு. ஈரங் காய்ந்தால், புட்டத்தில் மண லொட்டாது. ஈர நாவிற்கு. எலும் பில்வ. ஈர மில்லா நெஞ்சத்தாற்கு, என் செய்து மென்ன? ஈர வெங்காயத்திற்கு. இருபத்து நாலு புரையெடுக்கிறது . ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கினாள். சர்க்கிலிலே குத்தி, இறப்பிலே வைத்தாற்போல. ஈ வதையை கண்டால், யாவரு மண்டார். ஈனரை அடுத்தால், மான மழியும். உகிர்ச் சுற்றின் மேல், அம்மி விழுந்தது போல. உங்களப்பன் செத்தான், பழி யுண்னை விடேன். உங்களப்பன் பூச்சிக்கு பயப்பட்டேனா. உன் பூச்சிக்கு பயப்பட? உங்க ளுறவிலே வேகிறது. ஒரு கட்டு விறகிலே வேகும். உங்கள் வீட்டுப் பனங்கட்டை, ஒற்றைப் பணத்தை முடிந்துக் கொண்டு கிடக்குமோ? உச்சந் தலையிலே செருப்பாலடித்தாற்போல உடமைக் காரனுடன் உண்டா . ஓர் நாட்டியம்? உடமையுங் கொடுத்து. அருமையுங் குலைகிறது. உடம் புகளந்த கழுதை, உப்பு களத்திற்குப் போனது போல. உடம் பெடுத்தவ னெல்லாம். ஓடெடுத்தான்! உடம் போடே. ஒரு நாட்டிய முண்டா? உடலுக்குள்ளே, நாக்கை வளைக்காதே. 37 |