பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலும் நிழலும் போலே. உட லொருவனுக்குப் பிறந்தது. நாவு பலருக்குப் பிறந்தது. உடற்பிறப்பில்லாத உடம்பு, பாழ். உடுக்காப் புடவை, பூச்சிக் கிரை. உடுக்கைக் கிடை சிறுத்தா லோசை யுண்டு, உறலுக் கிடை சிறுத்து உதவி யென்ன? உடுத்த சில, பாம்பாய்க் கடித்தது. உடுத்திக் கெட்டான், வெள்ளைக்காரன் : உண்டு கெட்டான், சோனகன் - புதைத்துக் கெட்டான். ! தமிழன். உடும்புக் கிரண்டு நாக்கு, உனக்கு மிரண்டு நாக்கா? உடும் புடும்பே, இண்டிக்குப்போ. உடும்பு போனாலும் போகிறது, கையை விட்டாற் போதும். உடைந்த சங்கு, ஊத்துப் பறியுமா? உடைமையும் வறுமையும், உரு வழி நில்லாது. உடையவ னில்லாச் சேலை, உரு முழங்கட்டை. உடையவன் சொற்படி, உறலைச் சுற்றி களைபறி. உடையவன் பாராத பயிர், உருப்படுமா? உட்கார்ந் தல்லவோ, படுக்க வேண்டும். உட்கார்ந்தவனைக் கட்ட மாட்டாதவன், ஒடுகிறவனைக் கட்டுவானா? உட் சுவரிருக்க, புறச் சுவர் பூசலாமா? உண்கிற சோற்றிலே, நஞ்சை கலக்கிறதா? உண்ட இளைப்பு, தொண்டருக்கு முண்டு. உண்ட சோற்றுக்கு. இரண்டகம் பண்ணுகிறது. உண்டது தானே, ஏப்பம் வரும். உண்டவயிற்றுக்கு உபசாரமா? உண்டவயிற்றுக்குச் சோரும், மொட்டைத் தலைக்கு எண்ணெயும். உண்டவன், உரஞ் செய்வான். உண்ட வீட்டுக்கு, இரண்டகம் பண்ணுகிறதா? உண்டார் மேனி, கண்டாற் றெரியும். உண்டால் தின்மூல், ஊரிலே காரிய மென்ன? உண்டாற் கொல்லுமோ, கண்டாற் கொல்லுமோ? உண்டாற் பசி தீருமா, கண்டாற் பசி தீருமா? 38