பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டி சுருங்குதல், பெண்டீர்க் கழகு. உண்டு உறியி லிருவென்றால், உருண்டு தரையில் விழுகிறாய். உண்டு தின்று உயரமானால், ஊரிலே காரியமென்ன? உண்டுரிசை கண்டவனும், பெண்டுரிசை கண்டவனும், விடான். உண்டை பட்டு, உறங்குகிற குருவிபோல. உண்ணதுந் தின்னதும் லாபம், பனியில் கிடந்தது லோபம். உண்ணாக்கை அறுத்து, சுண்ணாம்புக் குறியிடுவேன். உண்ணச் சொத்து. மண்ணாய்ப் போகும். உண்ணாமல் ஊரெல்லாந் திரியலாம், உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது. உண்ணுங் கீரையிலே, நண்ணும் புல்லுருவி. உண்ணுண்ணென் றுபசரியான் வாசலில், உண்ணாம லிருப்பதே கோடி பெறும். உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்பது கோடி. நினைந் தெண்ணு மனம்! உண்பாரைப் பார்த்தாலும், உழுவாரைப் பார்க்கலாகாது. உண்பான் றின்பான் சிவப் பிராமணன், குத்துக்கு நிற்பான் வர முஷ்டி . உண்பான் றின்பான் சேப்பெருமாள், குத்துக்கு நிற்பான வைராகி. உண்பான் றின்பான் நயனப்பசெட்டி, உடன் கட்டை யேறுவான் பெருமாள் செட்டி. உண்மை நன்மொழி, திண்மை யுறுத்தும். உதட்டி லுறவும். உள்ளே பகையும். உதட்டுத் துறும்பு, ஊதப் போகாது. உதட்டு வாழப்பழத்தை. உள்ளே தள்ள வேண்டுமோ? உதவாச் செட்டிக்கு. சீட்டெழுதினது போல. உதவாப் பழங்கலமே. ஓசை யில்லா வெண்கலமே. உதறுகாலி வந்தாள். உள்ளதுங் கெடுத்தாள். உதாரிக்கு, பொன் துரும்பு. உதிக்கின்ற கதிரோன் முன்னே, ஒளிக்கு மின் மினியைப்போலே. உதைத்த கால புழுக்கிறதற்கு முன் அடிவயிறு சீழ் கட்டுகிறது. உதைப்பானுக்கு வெளுப்பான். சாதி வண்ணன். உத்தமனுக்குந் தப்பிலிக்கும். உ த வேண்டாம்.