பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தராயண மென்று, உறியைக் கட்டிக்கொண்டு சாகிறதா? உத்தியோகத்துக்குத் தக்க, சுகம். உத்தியோகம், புருஷ லக்ஷணம். உத்திராடத்தி லோரு பிள்ளையும், ஊர் வாரியி லொரு நிலமும் உபசாரஞ் செய்தவர்க்கு. அபசாரம் பண்ணுகிறதா? உபநயன மில்லாமல், கலியாணம் பண்ணினானாம். உப்பளத்து மண்ணும், உழமண்ணுஞ் செம்மண்ணும், காவேரி மண்ணும், கலந்து வழங்குகிறது. உப்பிட்டவர்கள், உள்ளளவும் நினை. உப்பிருந்த பாண்டமும் உபாயமிருந்த நெஞ்சமும், தப்பாமல் தட்டுண்டுடையும் உப்புக் கட்டினால், உலகங் கட்டும். உப்புஞ் சோறும், உணர்த்தியா யுண்ணிலயோ? உப்பு தின்றவன், தண்ணீர் குடிப்பான். உப்பு நீர் மேகஞ்சேர்ந்தால், உலகிற் பிரவாகம். உப்பு மிஞ்சினால், உப்புச்சாறு புளி மிஞ்சினால், புளிச்சாறு. உப்பு வாணிப னறிவானோ. கற்பூர வில. உப்பெடுத்த கையாலே, கற்பூரமு மெடுக்க வேண்டும். உப்பைச் சிந்தினயோ. துப்பைச் சிந்தினையோ? உப்பைத் தொட்டு, உரல் விழுங்குகிறது போல. உப்போடே. முப்பத்திரண்டும். உப்போ டொன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும். உமக்கென்ன வயதுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ? உமியுங் கரியு மிருக்கிறது. உடைமை செய்யப் பொன்னில்லை. உயர வுயரப் பறந்தாலும், ஊர்க்குருவி கெருடனாமா? உயிரிருக்க, ஊனை வாங்குகிறது. உயிரிருந்தால், உப்புமாரி உண்கலாம். உயிருள்ள மட்டும், தைரியம் விடலாமா? உயிரோடு திரும்பிப் பாராதவர். செத்தால் முத்தங் கொடுப்பாரா? உயிரோடு டொரு முத்தந் தராதவள், செத்தாலுடன் கட்டையேறு வாளா? 40