பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரலிலே தலையை மாட்டிக்கொண்டு, உலக்கைக்கு பயப்பட்டாற் றீருமா? உரலிலே துணிகட்டியிருந்தாலும், உரிந்து பார்க்க வேண்டு மென்கிறான். உரல், பஞ்ச மறியுமா? உரல், மத்தளத்தோடே முரையிட்டாற்போல. உரிசை கண்ட பூனை, உறியை யுறியைத் தாவுமாம். உரிப்பணம் போய், தெருச்சண்டையை யிழுத்துதாம். உரியிலே தயிரிருக்க, ஊரெங்கும் வெண்ணெய்க் கலைவானேன்? உரியை யிரட்டித்தால், உழக்கு. உருக்க முள்ள சிற்றுத்தே. ஒதுக்கில் வாடி கட்டியழ. உருட்டும் புறட்டும், ஒடுக்குஞ் சிறப்பை. உருத்திராட்சப்புன. உபதேசம் பண்ணினது போல உருவேற, திருவேறும். உலக்கை தேய்ந்து, உளிப்பிடி யாயிற்று! உலக்கைப் பூசைக் கசையாதவள். திருப்பாட்டுக் கஞ்சுவாளா? உலக்கையாலே காது குத்தி, உரலாலே தக்கை போட்டாற் போல! உலவாயை மூடினாலும், ஊர்வாயை மூடலாமா? உலவாய் மெழுகு, உருகுவது போல. உழக்கிலே, கிழக்கு மேற்கா? உழக்கு உற்முருக்கும் பதக்கு பரதேசிக்குமானால், உழுதவனுக் கென்ன? உழக்கு மிளகு கொடுப்பானேன். ஒளித்திருந்து மிளகு நீர் குடிப்பானேன்? உழவுக்கு ஒரு சுற்றும்வாராது, உள்ளனுக்குப் பம்பரம். உழவுந் தரிசும் ஒரு விடத்திலே, ஊமையுஞ் செவிடனும் ஒரு மடத்திலே. உழவொழிந்தமாடு. பட்டிப்புறத்திலே. உழுகிற நாளில் ஊருக்குப்போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்ல. உழுகிறவன் கணக்கு பார்த்தால், உழக்கோலு மிஞ்சாது.