பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழுத எருதானாலும், ஒரு முடி நாற்றைத் தின்னொட்டார். உழுவானுக்கேற்ற, கொழு : ஊராருக்கேற்ற தொழு. உளவனில்லாமல், ஊரழியுமா? உளியெத்தனை. மலையெத்தனை? உளுக்கார்ந்திருக்கச்சே யடித்தால், பொன்னாகும் ; ஒடச்சே படித்தால், செம்பானாலுமாகும் இரும்பானாலுமாகும். உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிறங்கும். கெட்டது. உள்ள கருத்து. வள்ளலுக்குத் தெரியும். உள்ளங்கை நெல்லிக்கனிபோல. உள்ளங்கைப்புண்ணுக்கு, கண்ணாடியேன்? உள்ளங்கையில், ஐந்து கொண்டை முடிக்கிறேன்? உள்ளங்கயிைல் தேனை வைத்து, புறங்கையை நக்கினாற்போல், உள்ளங்கையில், வைகுண்டங் காட்டுகிறேன் ! உள்ளதுங் கெட்டது. நொள்ளைக்கண்ணா உள்ள தெய்வங்களையெல்லாம் ஒரு மிக்க வருந்தினாலும், பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருடன், உள்ளத்திலொன்றுங் குறையாது. கள்ளமில்லா மனத்தோர்க்கு. உள்ளத்தைச் சொல்லி மெலிந்தேன், நொள்ளைக் கண்ணாச்சி பிச்சைபோடு. உள்ளத்தைச் சொன்னவன், ஊருக்குப் பொல்லாதவன். உள்ளத்தைச் சொன்னால், நோப்பாளமாயிருக்கிறது. உள்ளத்தை விற்று, உல்லததைக்கொள்ளு. உள்ள மாற்றைக்காட்டும். உரைகல்லும் மெழுகுண்டையும் உள்ளவனிடம், கள்ளன் போனாப்போல. உள்ளவன் பிள்ளை உப்போடுண்ணும், இல்லாதவன் பிள்ளை சீனியோடுண்ணும். உள்ளனுங் கள்ளனுங் கூடினால், விடிகிற மட்டும் திருடலாம். உள்ளிய தெள்ளியாராயினம், ஊழ்வினைப் பைய நுழைந்திடும். உள்ளியிட வுள்ளியிட, உள்ளே போச்சுது. உள்ளுறக்கொட்டினதேளே, ஒரு மந்திரஞ் சொல்லு கிறேன்கேளே! உள்ளூரிலே விலைபடாத மாடா, அசலூரிலே விலைப்படும்? உள்ளூர் மருமகனும் உழுகிற கிடாவும் சரி. உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளமில்லா மனதுக்கேன்? 42