பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளே பார்த்தால், ஓக்காளம்? வெளியே பார்த்தால், மேற்பூச்சு. உள்ளே வயிறெரிய, உதடு பழஞ்சொரிய. உறவிலே, நஞ்சு கலக்கிறதா? உறவு உண்காமல் கெட்டது. உடம்பு உடுக்காமல் கெட்டது. உறவுதான், பயிரிலே கை வையாதே . உறவுபோலிருந்து, குளவி போல கொட்டுகிறது. உறுட்சிக்கு நிகட்சி, புளிப்புக் கவளப்பன். உறுட்டும் புரட்டும். சறட்டையும் கையும். உறைமோருக்கிடயில்லாத வீட்டில், விலைமோருக்குப் போனது போல. உற்சாகஞ்செய்தால், மச்சைத் தாண்டுவான் உற்ற கணவனும் ஒரு நெல்லு முண்டானால், சித்திரம்போலே குடி வாழ்க்கை செய்யலாம். உற்றது சொன்னால், அற்றது பொருந்தும். உற்முருக் கொருபிள்ளை கொடுக்கிற தில்லை, நமனுக்கு நாலு பிள்ளை கொடுக்கிறது. உற்றார் தின்னால், புத்தாய் விலையும் : ஊரார் தின்னால், போராய் விளையும். உற்றுப் பார்க்கில், சுத்த மில்லை. உற்றுப் பார்த்த பார்வையிலே, ஒன்பது பேர் பட்டுப்போவார். உனக்காச் செனக்காச்சென்று, ஒரு கை பார்க்க வேண்டும். உன்தாலி அறுக்கச்சே. ஒரு கூடை தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன். உன்னுபசாரம், என் பிராணனுக்கு வந்தது. ஊ ஊசலாடி, தன்னிலையில் நிற்கும். ஊசி ஒரு முழுத்துணியாவது கொடுக்கும். உற்றார் என்ன கொடுப்பார்கள்? ஊசி கொள்ளப்போய், துலாக்கணக்கு பார்த்தது போல. ஊசிக்கண்ணிலே, ஆகாசம் பார்த்தது போல. ஊசிக்குக் கள்ளன், உடனே யிருப்பான்.