பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது சென்றாலும், பறையேவினாற்முன் செய்யும். எளிய கொக்கென் றிருந்தையோ கொங்கணவா? எளியவனுக்குப் பெண்டாயிருப்பதிலும், வலியவனுக் கடிமையா கிறது நலம். எளியவனைக்கண்டு. புளியங்காயைப் பறிக்கிறார் எளியவன் பெண்டாட்டி, எல்லாருக்கும் மைத்த எளியாரை வலியாரடித்தால், வலியாரை தெய்வ படிக்கும். எள்ளத்தனையை, மலையத்தன யாக்குகிறது. எள்ளத்தன யெடுத்தாலும், உள்ளதிற் குறையும். எள்ளிலுஞ் சிறிய இலை, என்ன இலை, விடத்தாரி இலை. எள்ளுக்காய் பிளந்தாற்போல, பேசவேண்டும். எள்ளுக்கு ஏழுழவு, கொள்ளுக்கு ஒருழவு. எள்ளுக்குத் தக்கின. எண்ணெய். எள்ளுத்தான், எண்ணெய்க்கு உலருகிறது! எலிப்புழுக்கை, யென்னத்துக்குலருகிறது ? எள்ளுப் போட்டால், என்ளெடுக்கப் போகாது- எள்ளுவிழுந்தால் எடுக்க மகாசேகன, இடறி விழுந்தால் எடுக்க மனிதரில்லை. எள்ளென்கிறதுக்கு முன்னே, எண்ணெய் கொண்டு வருகிமுன். எறிவார்கையிலே, கல்லு கொடுக்கிறதா? எறும்பு, எண்ணாயிரங் கோடிக்குந் தெரியும். எறும்புக்குக், கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம். எறும்புக்குத் தன்கையால், எண்சாண் உடம்பு, எறும்புக்கு மூத்திரம் ஏகப்பெருவெள்ளம். எறும்பு புகுத யிடமுண்டானால், ஆனையை விட்டோட்டலாம். எறும்பு. முட்டை கொண்டு திட்டையேறின், மழை பெய்யும். எறும்பூர, கற்குழியும். எறும்பூர விடங்கொடுத்தால், எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். எனக்குக் கட்டின லிங்கத்தை. குழிப்பாக்கு விளையாடுவேன். எனக்குத்தான், அத்தை வடைசுட்டாள், இழையை யதுக்குள் எப்படி நுழைத்தாள்? என் குடி கெட்டதும், உன் குடி கெட்டதும், விடிந்தாற் றெரியும். என் நாட்களெல்லாம், ஊமைகண்ட கனவைப்போல் பழுதாயின. 51