பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மகளுக்கு, எட்டு நாளைக்கு ஒரு விசை யெண்ணெய் தேய்த்து முழுக்காட்டுகிறது. என் மருமகளுக்கு. தீவாளிக்குத்தீவாளி யெண்ணெய் தேய்த்து முழுக்காட்டுகிறது. என் மகளுக்குக் குடல் பாக்கியந் தவிர, எல்லாப் பாக்கியமும் இருக்கிறது. என் மருமகளுக்கு, வேப்பெண்ணெயாந் தூக்கெண்ணெய், விளக்கெண்ணெயாந் தலைக்கெண்ணெய். என்றும் இடி குலைச்சல். எப்பொழுதும் சீர் குலைச்சல். என்றும் பயப்படுதலிலும், எதிரே போகுதல் உத்தமம். என்னடா, குச்சுக் கட்டிப் பேசுகிறாய்? என்னடா, கெட்டுப்போகிறாயென்றால், இன்னமுங் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடென் கிமுன். என்னடா, புரட்டாசி மாத முப்பதும், ஒரு கந்தாயமா? என்னடி என்னடி தெற்கத்தியாள், என்னேரம் பார்த்தாலும் தொள்ளைக்காது? என்ன மாயம் இடைச்சிமாயம். மோரோடு தண்ணீர் கலந்த மாயம். என்னாலான. உப்புத் திருமஞ்சனம். என்னுடைய வீட்டுக்குப் பூவாய்வரப், பொன்னுந் துரும்பாச்சுது. என்னைக் கலந்தவர்களென்றாலும், கை நிறைய பொன்னைக் கொடுத்தால், புணர்ந்து விடுவேன். என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக்கெடுத்தது முலை. என்னைப்போல் குரலும், எங்கக்காகப்போல ஒயிலும், இல்லையென்கிறதாங் கழுதை. என்ன விடைத்தால், உனின விடைவேன் அம்மலாலா. எ ஏசுமுங் கெட்ட வனே, ஏறடா பாடைமேலே. ஏகாதசி மரணம் முத்தியென்று. நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறதா? ஏடா கோடத்திற்கு வழி யெப்படி யென்றால், போகிறவன் தலையில் பொத்தென்றடிப்பதாம். ஏட்டி லடங்காது. எண்ணத் தொலையாது.