பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டுச் சுரைக்காய், வீட்டிற் கறிக்காகுமா? ஏணுக்குக் கோணும், ஏட்டிக்குப் போட்டியும். ஏணைக்கழிக்குக், கோணக்கழி வெட்டுகிறதா? ஏண்டா, கருடா சுகமா? இருக்கிற விடத்திலிருந்தாற் சுகம். ஏண்டா, தம்பி ரகுநாதா இதற்குள் வந்து புகுந்துக்கொண்டாய்? ஏண்டா , பட்டப்பகலிற் றிருடுகிறாய்? என்னவசரம் உனக்குக் தெரியுமா- ஏண்டா, புளிய மரத்திலேறினாயென்றால்? பூனைக்குட்டிக்குப் புல்ப றிக்கவென்முன். ஏண்டி, பெண்ணே? இணைத்தாய் குதிர்போலே? ஏண்டி, பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறுபற்றாமல். ஏது மற்றவனுக்கேன். இரண்டு பெண்டாட்டி? ஏத்தப் பாட்டுக்கு. எதிர்பாட்டில்ல. ஏராதவார்த்தை. வசையோடொக்கும். ஏரிநிறைந்தால், கரைகசியும். ஏரிமிதந்தால், இடையணை மதியாது. ஏரியாடு பகைகொண்டு, சவசஞ்செய்யாதிருக்கிறது? ஏரியோ தண்ணீர், சூரியதேவா? ஏருமுகிற பிள்ளை, இணைத்துப்போகிறது. பரியம் போட்ட பெண்ணை பார்த்து வள. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனங்கொண்டாடும். ஏர்க்கவாசனை, சேர்க்கவாசனை. ஏர்பிடித்தவனென்ன செய்வான். பானை படித்தவள் பாக்கியம். ஏர் பிடித்தவன் யேழை, பானை பிடித்தவள் பாக்கியம். ஏலேலசிங்கன் பொருள், ஏழுகடலிற்போனாலுந் திரும்பும். ஏவற்பேய், கூறையைப் பிடுங்கும். ஏவாமக்கள், மூவாமருந்து. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை. ஏழைச்சொல் அம்பலம் ஏறுமா? ஏழை பாக்குத்தின்ன. எட்டு வீடறியவேண்டும். ஏழைப்பிள்ளைக்கு, தெய்வமே துணை. ஏழையழுத கண்ணீர், கூரியவாளொக்கும். ஏழையென்றால், எவர்க்குமெளிது. ஏழையைக் கண்டால், மோழையும் பாயும். ஏளிதம்பேசி, இவ்வேடமானேன்.