பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயப்பா, கையை விடு. ஐயமான காரியத்தை செய்யலாகாது. ஐயம்புகினும், செய்வனசெய். ஐயர் இடங்கொடுத்தாலும், அடியார்களிடங்கொடார்கள். ஐயர்வருகிறவரையில், அமாவாசை நிற்குமா? ஐயனார் கோயிலிலே, ஆனைப்பிடிக்கவேண்டும். ஐயனார்கோயில் மண்கணமிதித்தால், அத்தனை பேரும் பத்திரகாளி. ஐயா கதிர்போலே, அம்மா குதிர்போலே. ஐயோ வென்றால், ஆறுமாச பாவம் சுற்றும். ஐவர்க்குந் தேவி, அழியாத பத்தினி . ஒக்கப் பிறந்தவர்கள், ஒலமிட்டழுகிறபோது, ஒப்பாரித்தங்கை, சிற்றாடைக்கழுதாளாம். ஒடிந்த கோல் ஆனாலும், ஊன்றுகோலாகும். ஒடுக்கம், சிதம்பரம். ஒட்டி உணர்ந்து. உருவின கோல்போலே. ஒட்டிக்கொண்டு வந்தாலும், தட்டிக் கழிக்கிறான். ஒட்டிய சீதேவி, நெட்டியோடே போம். ஒட்டினால் தொட்டிலுங் கொள்ளும். ஒட்டாவிட்டால் கட்டிலுங் கொள்ளாது. ஒட்டைக்குச் சுளவு, மீட்டாப்போலே. ஒட்டைக்குப் பளுவு, ஏத்துகிறது போலே. ஓட்டைக் கூத்தன் பாட்டுக்கு. நெட்டைத் தாப்பாள் போடு ஒண்டவந்த பிடாரி, ஊர் பிடாரியைத் துரத்தினதாம். ஒண்டவந்த யெலி, உரம் பெற்றது. அண்டியிருந்த பூனை, ஆலாப்பறக்குது. ஒண்ணான தெய்வம். உறங்கிக் கிடக்கும் போது. பிச்சைக்கு வந்த தெய்வம். தத்தியோதனத்துக் கழுகிறதாம். ஒண்ணு கொண்டு எட்டு வித்தால், லாபமேலாபம். ஒண்ணைப் பெற்றலும், கண்ணைப் பெறு. ஒதி பெருத்து. தூணாகுமோ? ஒத்த விடத்தில், நித்திரைக்கொள். 55