பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நன்றி செய்தவரை, உள்ளளவும் நினை ஒரு நாளும் சிரிக்காதவன், திருநாளிற் சிரித்தான். திருநாளும் வெறுநாளாச்சுது. ஒரு நாள் கூத்துக்கு, தலையைச் சிறைத்தது போல. ஒரு பணங் கொடுத்து அழச்சொல்லி, ஒன்பது பணங்கொடுத்து ஒயச் சொன்னானாம்! ஒரு பானை சோற்றிற்கு, ஒரு சோறு பதம். ஒரு பிள்ளை பெற்றவளுக்கு, உரியிற் சோறு, நாலு பிள்ளை பெற்ற வளுக்கு, நடுத்தெருவிற் சோறு. ஒரு பிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம். அது செரியாமாந்தம் பிடித்துச் செத்ததாம். ஒரு புத்திரனானாலும், குரு புத்திரன் சிலாக்கியம். ஒரு மரத்துப் பட்டை, ஒரு மரத்திலொட்டுமா? ஒரு மர மிரண்டு பாகள், ஒன்று துங்கு ஒன்று கள்ளுஅறிவுடன் பார்க்கும்போது. அதுவுங்கள்ளே, இதுவுங் கள்ளே. ஒரு மிளகுக்கு, ஆற்றைக் கட்டியிறைத்த செட்டி ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால், வருகிற விருந்துக்கு மனங்கலங்கமாட்டேன். ஒருமைப்பாடு இல்லாத குடி, ஒருமிக்கச் கெடும். ஒருவரறிந்தால் இரகசியம். இருவரறிந்தால் அம்பலம். ஒருவர்க்கு நிறைவதும் குறைவதும், ஊழ்வினைப் பயன் ஒருவனுக்கு, இருவர் துணை ஒருவனும் பிறப்பா, ஒண்டிமரந் தோப்பா? ஒருவனை அறிய, இருவர் வேண்டும். ஒருவனைக் கொன்றவன், உடனே சாவான பலபேரைக் கொன்ற வன், பட்டமாளுவான். ஒருவன் தலையில், மாணிக்கம் இருக்குதென்று வெட்டலாமா? ஒரு விரல், நொடி யிடாது. ஒலியிருந்த சுட்டி. இன்ன கட்டியென்று தெரியாது. ஒவ்வாக் கூட்டிலும், தனிமை அழகு. ஒழுங்கு ஒரு பணம், கவுக்கு முக்காற்பணம். ஒளிக்கப்போயும், தலையாரி வீட்டிலே வைக்கிறதா? ஒளிக்குஞ் சேவகனுக்கு, முகத்திலேன் மீசை?