பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கத்தில் சிமிண்டுகிற கை, நமனல்லவோ? சுங்சை முளைத்தாலும், பேய்ச்சுரை நல்ல சுரையாகுமா? கங்கையில் மூழ்கினாலும், காக்கை அன்னமாகுமா? கசக்கி, மொகரலாமா? கசடருக்கில்லை, சுற்றோர் உறவு. கசடர்க்கு யோகம் வந்தால், கண்ணுந்தெரியாது. காதுங் கேளாது. கசடான கல்வியினும், கல்வி ஈனம் நலம்? கஞ்சிக்கிப் பயறு, கலந்தாப்போலே. கஞ்சித்தண்ணிக்குக் காத்தாய்ப்பறக்கிறது. கஞ்சிவரதப்பா, எங்கேவருகுதப்பா? கஞ்சிவார்க்க ஆளில்லாமற்போனாலும், கச்சைகட்ட ஆளிருக்கிறது. கடலிற் கையைக் கழிகிவிடுகிறது. கடலிற் பெருங்காயம், கரைத்தாற்போல் கடலிற்றுரும்பு கிடந்தாலும், மனதிலொரு சொற்கிடவாது. கடலுக்குக் கரைபோடுவாருண்டா? கடலுப்பும், மலைநெல்லியும், கலந்து சேர்ந்தாற்போலே! கடல அடைக்க, கரைபோடலாமா? கடலைத்தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட காலில்லை. கடலைத் தாண்டினவனுக்கு, வாய்க்கால் தாண்டுகிறதரிதா? கடலைத் தூர்த்தாலும், காரியமுடியாது. கடல் கொதித்தால், விளாவ நீரெங்கே? கடல் திடலாகும். திடல்கடலாகும். கடல் நீர் நிறைந்தென்ன, காஞ்சிரை பழுத்தென்ன. கடல் பெருகினால், கரையேது ? கடல் மீனுக்கு நுளையன், இட்டது சட்டம். கடல்வற்றில் கருவாடு தின்னலாமென்ற, உடல்வற்றிச் செத்ததாங் கொக்கு. கடற்கரைத் தாழங்காய், கீழேதொங்கியென்ன, மேலே தொங்கியென்ன? கடனோடே கடன். உடனோடே உடன் கடனோடே கடன், கதம்பம் காற்பணம். கடன்காரனுக்குக் கடனும், பழிகாரனுக்குப் பழியும். கொடுத்துத் தீரவேண்டும். 60