பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரனை வைத்த. கழு உண்டா? கடன்பட்டார் நெஞ்சம்போலே, கலங்குகிறது. கடன் வாங்கி உடன் வாங்கி அம்மை கும்பிட, நீயார் கூத்தி விழுந்து கும்பிட? கடன்வாங்கியும் பட்னி, கலியாணம் பண்ணியுஞ் சந்நியாசி. கடா பின் வாங்குகிறது. பாய்ச்சலுக் கிடம். கடா மேய்க்கிறவன் அறிவானோ. கொழுபோன விடம். கடாவின் சந்திற் புல்லைத் திண்னுகிறது போல. கடிக்க மாட்டாத பாக்கு, உத்தமதானம். கடிக்க வருகிற நாய்க்கு, தேங்காய் கீத்து போட்டாற்போலே. கடி கோலிலே, கட்டின நாய். கடிக்கிற நாய்க்கு, கழுத்திற் குறுங்கயிறு. கடித்த மூட்டை கடிக்காத மூட்டை, எல்லாமுட்டையுஞ் சரிதான். கடித்த நாகம், கலந்துறவாகுமா? கடித்த பாக்கு கொடாத சிற்றப்பன், கடைத்தெரு வரையிலும் வழி விட்டானாம். கடுகிலுங் கால் திட்டங் கரண்டி, அதிலுங் கால் முட்டை யெண்ணெய் கடன் வாங்கி, என் தலை சீவிக்கட்டி மகள் தல வாரிக்கட்டி, மருமகள் தலை கோதிக்கட்டி குறையெண்ணெய் வைத்தவிடத்தில், அசல் வீட்டுக்காரிவந்திடறிவிட்டாள், அது பெரியேரி பெருகினாற்போல பெருகிப்போயிற்றாம்! சுடுக சிறுத்தாலும், காரம்போமா? கடுகுச்சு முடுகுச்சு. வடுகச்சிக் காரியம். கடுகுபோகிற விடத்தில் தடி யெடுத்துக்கொண்டு திரிகிறவனுக்கு, பூ சுணிக்காய்ப் போகிறவிடத் தெரியாது. கடுகைத் துளைத்து. எழு கடலைப் புகட்டினது போல. கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் பரணி நஞ்சு. கடுங்காற்று. மழை கூட்டும். கடுஞ்சிநேகம் பகைகாட்டும். கடுஞ்சிநேகம். கண்ணல் கொடுக்கும். கடுஞ்செட்டு, கண்ணைக் கெடுக்கும். கடுஞ்சொற் கேட்டால், காதுக்குக் கொப்பளம். கடு நட்புப் பகை விளைப்பு. கடும் பசி கல்மதிலை யுடைத்துக், களவு செய்யச் சொல்லும் . சுடும் போரில், கைவிடலாமா? கடுவெளியை, கானல் சலமாய்க் கண்டது போலே. கடைகெட்ட மூளிக்கு, கோபங் கொண்டாட்டம். கடைகெட்ட மூளி சூலானாலும், காற்பணத்துக்காக செல்லும். கடைகெட்ட வாழ்வு, தலைகட்ட நேரமில்ல. சுடைக்குக் கடை ஆளிருப்பார்கள்.