பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசிச் சோற்றுக்கு மோரும். கால்மாட்டிற்குப் பாயும் வேண்டும். கடைந்த மோரிலே, குடைந்து வெண்ணெயெடுக்கிறது. கடையிலரிசி, கஞ்சிக்குதவுமோ? அவிசாரி புருவன். ஆபத் துக்குதவுவானா? கடையிலேகொண்டு, மனையிலே வைக்கிறேன். கடைத்தேங்காயையெடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல. கட்ட கரிய மணி யில்லாமற்போனாலும், பேர் பொன்னம்மாள். கட்டாந்தரை அட்டையைப் போலே, கட்டிக்கொண்டு புரளுகிறது - கட்டாந்தரையிலே, முக்குளிக்கிறது. கட்டாந்தரையில் தேள்கொட்ட, குட்டிச்சுவரில் நெரிகட்டின தாம். கட்டிக்கொண்டுவரச்சொன்னால், வெட்டிக்கொண்டு வருவான். கட்டிக்கொடுத்தசோறும், கற்றுக்கொடுத்த சொல்லும், காலமுள்ளளவுமிருக்குமா? கட்டித்தங்கமானால், கலிரென்றொலிக்குமா? கட்டிப்பயெல்லாம், கூழ்ப்பயாய்க் கரைந்தது. கட்டியழுகிறபோது, கையுந்துழாவுகிறது. கட்டிலின் மேலேறியும், முறையா? கட்டிலுள்ள விடத்தில் பிள்ளை பெற்ற, சுக்குக்கண்டவிடத்தில் காயந்தின்பாள். சுட்டி வழிவிட்டால், வெட்டி அரசாளாலாம். கட்டினவனுக்கு ஒரு வடு, கட்டாதவனுக்க ஊரெங்கும் வடு. கட்டின வீட்டுக்கு, கருத்து சொல்வார் அநேகர். கட்டுச்சோற்றுமுட்டையும், கைப்பிள்ளையும் எடுக்கலாகாது. கட்டுப்படாதபெண்ணு, சொட்டு போட்டுக்கொண்டு போயிற்று. கட்டுப்பட்டாலும், கவரிமான் மயிராற் கட்டுப்படவேண்டும். குட்டுப் பட்டாலும், மோதிரக்கையினாற் குட்டுப்பட வேண்டும். கட்டுமரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல. கட்டுருட்டி காளை போல.