பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டப்பாரையை விழுங்கி, சுக்கக்கியாழங் குடித்தது போல. கட்டை விளக்குமாத்துக்குப், பட்டுக்குச்சுகட்டினாப்போல. கட்டோடேபோனால், கனத்தோடே வரலாம். கணக்கன் குஞ்சையும் காக்கையின் குஞ்சையும், கண்டவிடத்தில் கணிகணக்குத்து. கணக்கதிகாரத்தைப் பிளக்குங் கோடாலி. கணக்கப்பிள்ளை பெண்சாதி, கடுக்கன் போட்டுக் கொண்டா ளென்று காரியக்காரன் பெண்சாதி, காதையறுத்துக் கொண்டாளாம். கணக்கறிந்த பிள்ளை வீட்டிலிருந்தால், வழக்கமுது. கணக்கனுக்குப் பட்ணி, உடற்பிறப்பு. கணக்கன் கணக்கறிவான். தன் கணக்கைத் தானறியான். கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனைக் கணக்குத் தின்னுவிடும். கணக்கன் வீட்டுக் கலியாணம், விளக்கெண்ணைக்குக் கேடு கணக்கிலே கயறா . கோர்த்திருக்குது. கணக்கைப்பார்த்தால், பிணக்குவரும். கணபதிபூசை, கைமேலே. கணவனை வைத்துக்கொண்டல்லவோ, கள்ளமாப்பிளையைக் கொள்ள வேண்டும். கண்கட்டி மந்திரமா. காட்டவந்தாய்? கண்கட்டின, புமுப்போலே. கண்குற்றம், கண்ணுக்குத் தெரியுமா? கண்குத்தி பாம்பு போலக் கண்ணைமுடிப்பார்த்திருந்தேன். கண்குருடானாலும், நித்திரையில் தாட்சியில்லை. கண்கெட்டபிறகா, சூரிய நமஸ்காரஞ் செய்கிறது. கண்கொண்டல்லோ. வழி நடக்கவேணும்? கண்ட கண்டகோயிலெல்லாம், கையெடுத்துக்கும்பிட்டேன், கண்டது கற்கப் பண்டிதனாவான். கண்டதுகாட்சி. கொண்டது கோலம். கண்டது சொன்னால், கொண்டிடும்பகை. கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை. கண்டதைக்கேளாவிட்டால், கொண்டவனடிப்பான். கண்டத்தைக்கொண்டு, கரையேறவேண்டும். கண்டத்தைக்கொண்டு. காலைவாரியடிக்கிறது. 63