பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமாப்பினையை நம்பி, கொண்ட மாப்பிளையைக் கைவிட்டாப் போலே. கண்டவிடம், கயிலாயம். கண்டறிய வேணும், கரும்புசுகம், உண்டறியவேணு முடல், கண்டறியாதவன் பெண்டுபடைத்தது. காடுமேடெல்லாம் இழுத்துக் கொண்டு திரிந்தான். கண்டார் கண்டபடி பேசுகிறது. கண்டாலல்லோ பேசுவான். தொண்டமான். கண்டாற்றெரியாதா, கம்பிளியாட்டுமயிரை? கண்டிடிலொன்று. காணாவிடிலொன்று. கண்டிடில் ஆயங், காணாவிடில் மாயம். கண்டிடில் முறை சொல்லுகிறது. காணாவிடில் பேர் சொல்லுகிறது. எண்டிருந்தும் மலத்தை. கவிழ்ந்திருந்து தின்னுவார்களா? கண்டுங்காணவில்லை. கேட்டுங்கேட்கவில்லையென் திருக்கவேண்டும். கண்டு செத்தபிணமானாற் சுடுகாடறியும். கண்டுபேச, காரியமிருக்கிறது முகத்தில் விழிக்க, வெட்கமாயிருக்கிறது. கண்ணாடி நிழலில் கண்டபணம், கடனுக்குதவுமா? கண்ணடி, பித்தன், கருங்குரங்கு காட்டானை. மண்ணாளும் வேந்தனோ டைந்து. கண்ணிமையாமுனனே, பறந்து போனாள். கண்ணினாற் கண்டது பொய், காதினாற்கேட்டது மெய். கண்ணினாற் கண்டது பொய், கருதிவிசாரித்தது மெய். கண்ணினாற் கண்டது பொய், அகப்பைக்கூரு பார்த்ததுமெய். கண்ணினாற் கண்டதைக் கையினாற்செய்கிறது. கண்ணினாற் கண்டதை. எள்ளுக்காய்ப் பிளந்தாற்போற் சொல்லுகிறது. கண்ணினாற் சீவன் கடகடவென்று போயினும், வண்ணானுக்கு மழை நஞ்சு. கண்ணாரக்கண்டதற்கேன், அகப்பைக்குறி? கண்ணானபேரையெல்லாம் புண்ணாக்கிக்கொண்டு, கரும்பாக பேரை யெல்லாம் வேம்பாக்கிக்கொண்டான். சுண்ணான மனதைப் புண்ணாக்குகிமுன் 64 |