பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிமைபோலே, கரிசனமாய்க் கார்க்கிறது. கண்ணியிலகப்பட்டமானுக்குக் கணத்தில் மனங் கலங்கும். கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பாருண்டோ? கண்ணிலெண்ணெய் கரிக்குமா, பிடரியிலெண்ணெய் கரிக்குமா? கண்ணிலேப்படுகிறது. புருவத்திலே. கண்ணிற்பட்டால் கரிக்குமா, புருவத்திற்பட்டால் கரிக்குமா? கண்ணுக்கிமை, காதமா? கண்ணுக்குக் கண்ணருகே, காணலாம். கண்ணுக்குக் கண்ணாயிருந்து கடைப்பெண்ணுக்கு வழிபாற்கிறது. கண்ணுக்குக் கலத்தண்ணீர். விடுகிறது. கண்ணுக்குப் புண்ணுமல்ல, காண்பார்க்கு நோயுமல்ல. கண்ணுக்குப் புருவங் காதமா? கண்ணுக்கு மூக்குக்குங் காலமிப்படி வந்ததே. கண்ணுக்கு மூக்குக்கும் நேராகப்பாரு . கண்ணுங்கருத்து முள்ள போதில்லாமல், கண் பஞ்சடைந்த பின்பு என்ன கிடைக்கும்? கண்ணும் புண்ணும் உண்ணத் திரும். கண்ணுள்ள போதே காட்சி, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள். கண்ணை இமை காத்தது போலே. கண்ணைக் கட்டி, காட்டிலே விட்டது போல. கண்ணைக்காட்டி யழைத்தால் வராதவள், கையைப்பிடித் தழைத்தால் வருவானா? கண்ணைக் கெடுத்த தெய்வம், மதியைக் கொடுத்தது. கண்ணைக் கொண்டல்லோ, வழி நடக்க வேண்டும். கண்ணைக்கொண்டு நடந்தது போல, உன்னைக்கொண்டு நடந்தேன். கண்கணவிட்டு, மாட்டை முட்டவிடுகிறது. கண்ணொளி பெரிதோ, கதிரொளி பெரிதோ? கண்ணோடே பிறந்த காவேரியானாலும், நம்மெண்ணஞ் சரியாமா? கண்ணோ புண்ணோவென்று, கலங்கி மனந் திடுக்கிடு கிறது. கண்பறி கொடுத்துக், கலங்கினாற்போலே.