பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கல்லிலே, நாருரிப்பான். கருங்காலி கட்டைக்கு வாய்கோணாக்கோடாலி, கதலித் தண்டுக்கு வாய் கோணிற்றாம். கருங்காலியுலக்கைக்கு வெள்ளிப்பூண், கட்டினதுபோல, கருடனைக்கண்ட, பாம்பு போல. கருடன்காலிற் கெச்சை கட்டினது போல. கருப்பங்கொல்லையிலே, நெருப்புப்பொறி விழுந்தாப்போல. கரும்புக்கட்டி ஆதாயத்தை (எறும்பு) இழுத்துக்கொண்டு போச்சுதாம். கருப்புட்டியிலும், கல்லிருக்கும். கருப்புட்டியென்றவன் வாயைச், சளுப்புட்டியென்று நக்கு கிறதா? கருமத்தை முடிக்கிறவன், கடலை ஆராய்வான். கரும்பாலையிற்பட்ட எறும்பு போல. கரும்பு கசக்கிறது. வாய்க்குற்றம். கரும்புக்கட்டாலே கழுதையையடித்தால், கழுதைக்குத் தெரியுமோ கரும்புருசி. கரும்புக்கட்டோடேயிருந்தால், எறும்பு தானே வரும். கரும்புக்குழுதபுழுதி, காச்சினபாலுக்குக் சர்க்கரையாமா? கரும்பு தின்னக் கூலியா? கரும்பும் எள்ளும், கசக்கினாற்முன் பலன். கரும்பும், வேம்பாச்சே. கரும்புருசியென்று. வேரோடு பிடுங்கலாமா? சுரும்பை விரும்ப விரும்ப, வேம்பு, கருவிழி மணிபோலே, கரிசனமாய்க்கார்க்கிறது. கருவை உருவறியான், கண்டாரைப்பேரறியான். சுரைகாணா கப்பலைப்போலே. கரைதட்டின, கப்பற்காரன் போல. கரைப்பார் கரைத்தால், கல்லுங்கரையும். கர்த்தாவைக் குருடன் வேண்டுவது, கண்பெறத்தானே. கலகத்திலே புகாதவன், நகரத்திலேபோவான். கலகத்திலே போயும், கால்மாடு தலமாடா. கலக்சந்தையைக் கட்டிக்கொண்டு, காணப்போனாளாம். அவள் இரு கலக்கந்தையைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம். கலக்கமில்லாநெஞ்சுக்கு, இளக்கரிப்பென்ன.