பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கலந்தால், குலங்கலக்கும். கலத்திலே சோற்றையிட்டு, கையைப்பிடித்தாற்போல கலப்பணத்தைப் பார்க்கிலும், ஒரு கிழப்பிணம் நல்லது. கலப்பாலுக்குத் துளிப்பிரை. கலப்பால ஒருமிக்கக்குடித்த பூனையை, உழக்காகிலுங் கறக்கச் சொன்னால் கறக்குமா? கலப்பாலையும் சோற்றையும், காலாலுதைத்துப்போட்டு, விலை மோருக்கு கூழுக்கும். வெளியே தவிக்கிறது. கலப்பால் கறக்கலாம். துளிப்பால் முலைக்கேற்றலாமா? சுலமாயிடித்தவள் பாபி, கப்பியையிடித்தவள் புண்ணியவதியா? சுலம் போனதுமல்லாமல், கண்ணுக்கும் மூக்குக்கும் வந்தது கேடு. கலவுமிதின்றால், ஒரு அவிழ்தட்டாதா? கலியன், பாற்சோறு கண்டது போல. கலியாணங்கழிந்தால், மைச்சிமிழ் கிட்டாது. கலியாணச்சந்தடியில், தாலிகட்ட மறந்தது போல. கலியாணத்திற்கு வந்த பெண்டுகளிடத்திற் போனாலும் போவேன் இல்லாவிட்டால் கல்லிலேவைத்து நறுக்குவேன். கலியாணப் பந்தலிலே, கட்டின ஆடுபோலே. கலியாணமெங்கே, காசுப்பையிலே? கலியாண வீட்டிலே, பிள்ளை வளர்த்தாப்போலே. கலியாண வீட்டிற்குப் போயறியான், மேளசத்தமும் கேட்டறியான். கலியாண வீட்டிற் பந்தக்கால கட்டியழுகிறவள், செத்த வீட்டிற் சும்மாயிருப்பாளா? கல்மேலெழுத்துக் கவயுமா? கல்லடி சித்தன் போகிறவழி. காடுமேடெல்லாந் தவிடுபொடி, கல்லாடம் படித்தவனோடே மல்லாடாதே. கல்லாதவரே, கண்ணில்லாதார். கல்லாதார் செல்வத்திலும், கற்மூர் வறுமை நலம். கல்லாருறவிலும், கற்றார் பகை நலம். கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா? கல்லிலும் வன்மை , கனமூடர் நெஞ்சம். கல்லிலே. வெட்டி நாட்டினாப்போலே. கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா? கல்லுங்கரையுமே. கற்றூணிற்றுப்போமே. கல்லுந் தேங்காயும், சந்தித்ததுபோலே பேசு கிறன்.