பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணவொருதரம். கும்பிட வொருதரமா? காணுது. கண்டாற்போலே. காணாமற் கண்டேனோ கம்பங்கதிரை, சிந்தாமற் குத்தடி சில்லிமுக்கி. காணி, கவிழ்ந்து போகிறதா? காணிகாணியாய்ச் சம்பாதித்து, கோடி கோடியாய்ச் செலவழிக்கிறது. காணிக்குச் சோம்பில், கோடிக்கு வருத்தம். காணிக் கொத்தது. கோடிக்கு, காணி தேடி, கோடி யழிக்கிறது. காண்பாரைக் கண்டு, கழுதையும் பரதேசம் போயிற்றம். காதங்கொடுத்து. இருகாதம் வாங்குகிறது போல. காதவழி பெயரில்லான், கழுதையோடொக்கும். காதவழி போயறியான், கழுதைப்பிறப்பு. காதறுத்தாலும் அறுக்கும். பேனெடுத்தாலும் எடுக்குங் குரங்கு . காதிலே நாராசம். காச்சி விட்டது போல. காது குத்தப் பொறுக்காதா? காதுக்கிட்டால், முகத்துக்கழகு. காதுங்காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும் காத்திருந்தவன் பெண்டாட்டியை, நேற்றுவந்தவன் கொண்டுபோனான். காற்று மழையும், கலந்தடித்தாற்போல. காந்தத்தின் முன், ஊசி கம்பித்தாற்போல, காமனுக்குக் கண்டவிடத்திற் கண் காயாகக் காய்த்து. பூவாகப் பத்துதாம். காயுங்கறியும் உண்டானால், கார்த்திகை மாதங் கலியாணம். காயும் புழுகுக்குச் சாயும் நிழற்போல. காய்த்த மரம். கல்லெறிப்படும். காய்ந்த மரம், தளிர்க்குமா? காய்ந்த மாடு, கம்பங்கொல்லையில் வீழ்ந்தது போல. காய்ந்தும் கெடுத்தது. பேய்ந்தும் கெடுத்தது. காராம் பசுவுக்குப் புல்லுமாம், நந்தவனத்திற்குக் சுகாயுமாம். 76