பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலை இஞ்சி கடுபகற் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலந் திண்ணில் கோலை மூன்றிக் குறுகி நடந்தவர், கோவை விட்டுக் குலாவிநடப்பரே. காலைப்பிடித்த சனியன், ஊரைச் சுற்றியடிக்கும். காலை மோட்சமும், பால் ஞானமும் நிலைக்காது. கால்போகா படத்திற் நலயிட்டுக் கொள்ளாதே. கால்படி அரிசிக்காரனுள்ளமட்டுந்தான். கால் மாடு தலைமாடு தெரியாமல் காவடிப்பாரஞ் சுமக்கிறவனுக்குத் தெரியும், சுமக்காதவனுக் கென்ன தெரியும். காவல்தானே, பாவையர்க்கழகு. காகா மாடானாலும், கண்ணுக்குழக்குப் பால்தா? காற்றுக்கா மழைக்கா, போர்த்துக்கத் துணிக்கா? காற்றுக்கெதிரில் துப்பினால், முகத்திலே விழும். காற்றும் மழையும், கலந்தடித்தாற்போலே. காற்றுள்ளபோது தூற்றிக்கொள், கரும்புள்ள போது ஆடிக் கொள். கானலைச் சலமாய், கண்டது போல. கிடக்கிறது கிடக்கட்டும். கிழவனை யெடுத்து மணையிலேவை. கிடக்கிறது குட்டிச்சுவர், கினவுகாணுகிறது மச்சுவீடு. கிடை கிடந்த விடத்தில், மயிர்கூடக் கிடையாது. கிடையாச் சரக்கு கிடைத்தாற்போல. கிட்ட நெருங்க, முட்டப்பகை. கிட்டவா நாயேயென்றால், முஞ்சியை நக்குகிறது. கிட்டினால் ராமா கோவிந்தா, கிட்டாவிட்டா லொன்றுமில்லை. கிணறு தப்பி, துரவிலே விழுந்ததாம். கிணறு வெட்ட, பூகம் புறப்பட்டது போலே. கிணறு வெட்டி, தவளையைப் பிடித்துக்கொண்டு வந்து விடவேண்டுமா? விணற்றிலே, கல்போட்டாற்போல் கிடக்கிறது. கிணற்றுக்குத் தப்பி, தீயிலே பாய்ந்தானம். கிணற்றுக்குள்ளே, கங்கை குதித்தாற்போல. கிணற்றுத் தண்ணியை வெள்ளங்கொண்டு போமா? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன். கிணற்றுத் தவகள், தண்ணீர் குடியாததைக் கண்டாதார்? 78