பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீரையு மாவும், கெட்ட புளிச்சாறும். கீரைவேர் பிடுங்குகிறத்துக்கு, ஏலேலோ பாட்டா? கீர்த்தி பெற்று, கிலேசமென்ன? கீர்த்தியாற். பசி தீருமா? கீழெலிபோலத் தோண்டி, கிரிகிக்கிறது. கீழேழுலோகமும் மேலேழுலோகமும் கண்ட நாச்சியாரே, கெட்டுப்போன என் கழுதையைக் கண்டாயா? கீழோராகிலும், தாழவுரை. கீழ்காது மேல் காது மூளி, சண்டைக்கு ரெணபத்திர காளி. கீழ்த்தெருக்கிழவி, அவிசாரி போனாளென்று, மேல் தெருக 'கிழவன் கோசத்தில், கிட்டியைக்கட்டி யடித்தானாம். கீழ்த்தெருவிலே பல்லக்குக்கொடுத்து, மேல் தெருவிலே பிடுங் கிக் கொள்ளுகிறது. குங்குமக்கோதைக்கும் அஞ்சுபணம், குருட்டுக்கண்ணிக்கும் அஞ்சுபணமா? குங்குமஞ்சுமந்த கழுதை. பரிமளமறியுமா? குசத்தாதனுமில்லை. இட ஆண்டியுமில்லை. குசத்தி நாக்கைக் கூழையாயறுத்தாலும், குடம் இரண்டு காசென்பாள். குசவனுக்குப் பலநாகாவேலை, தடிகாரனுக் கரைநாழிகைவேலை. குச்சத்திரம். குசுவாய்ப் போக குச்சத்திரம், குடியைக் கெடுக்கும். குஞ்சுடன் மேய்ந்த , கோழியைப் போல. குடத்தினில் விளக்கையிட்டுக் கோபுரத்தின் மேல் வைத்தாற் போல. குடந்தண்ணியிற் கொள்ளிவைத்தாற்போல. குடப்பால் கறந்தாலும், கூறைபிடுங்கிறமாடு ஆகாது. குடலும் கூந்தலும், கொண்டது கொள்கை. குடலப்பிடுங்கிக் காட்டினாலும், கசகரணவித்தை யென்கிறான். குடல் கூழுக்கழுகிறதாம். கொண்டை பூவுக்கழுகிறதாம். குடாதகண்டனும், விடாதகண்டனும் கூடினாற்போலே. குடிக்கிறது எருமை மூத்திரம். கடித்துக்கொள்ளுகிறது இஞ்சிப்பச்சடி