பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிக்கிறது கூழு, கொப்பளிக்கிறது பன்னீர். குடிக்கிற பாலைக் கமாவெடிப்பில் வைத்தாற்போல. குடிக்கிற முலையுஞ் சரி, பிடிக்கிற முலையுஞ்சரி. குடி, சூது. விபசாரம், குடியைக் கெடுக்கும். குடித்த மருந்து குடித்தாற்போ லெடுத்தால், பரிகாரி வாயிலே மண்ணுதான். குடித்தனமோ, துரைத்தனமோ? குடியனும், வெறியனும் சரி. குடியாதவீடு, விடியாது. குடியிருந்து பார், கூட்டு பயிரிட்டுப்பார்- குடியில்லாவூரில், குருவியும் பறக்காது. குடியிற் பெண்ணின் வயிறெரியக், கொடியிற்செல நின்றெரியும். குடிவைத்த வீட்டில், கொள்ளி வைக்கலாமா? குடிவைத்துக் கொண்டாயோ? கொள்ளி வைத்துக் கொண்டாயோ? குடுமிக்குத்தக்கின, கொண்டை, குடுமித்தலையன் வீராப்பைக் கொண்டத்தலையா பாரடா? குடுமித்தலையும், மொட்டைத்தலையுமாய்க், கூட்டுகிறது. குட்டி குலைத்து. நாயின் தலையில் வைத்தாற்போல. குட்டியின் கையைப்பிடித்து குரங்கு, கொள்ளிக்கட்டைச் குடுபார்த்தாற்போலே. குட்டிக்கரணம் போட்டாலும், லோபன் கொடான். குட்டிக்கலகம் பண்ணுகிறவன், குட்டுப்பட்டுச் சாவான். குட்டிச் சுவரில் தேள் கொட்டத் தண்ணீர் மிடாவில் நெரிகட்ட. குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ள, வெள்ளெழுத்தா? குட்டிச்சுவரும், குரங்கிருந்த மாளிகையும். குட்டிப்பாம்பை யடித்தாலும், குத்துயிராக விடப்போகாது. குட்டிப்போட்ட நாய்போற் குலைக்கிறது. குட்டிப்போட்ட பூனைப்போல், அலைகிறான். குட்டின குட்டும், குண்டிற்பாய்ந்த தண்ணீரும், திரும்புமா? குட்டைத்தாதன் மகன், மொட்டைத்தாதன், குளத்திலே விழுந்து செத்தான். குட்டையைக்கலக்கிப், பருந்துக்கிரையிடுகிறது. குணக்கெடுக்க, நாய்வாலைக் கூடுமா? 81