பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லா வித்தையெல்லாம், அவித்தை. முற்றவன் மணமுற்றவன், குணமற்றவன், மணமற்றவன். டாகரணம் போட்டாலும், பிண்டாச்சோற்றக்கு வழியில்லை, குண்டி காஞ்சாற், குதிரை வைக்கற்றின்னும். குண்டி கூழுக்கழுகிறது. கொண்டை பூவுக்கழுகிறது. குண்டி மறைக்கத் துணியில்லே, கொண்டை பூவுக்கழுகிறதாம். குண்டுசட்டியிற், குதிரையோட்டுகிறான். குண்டுபோன விடத்தில், குருவிநேர்ந்தது. குண்டுமணி குப்பையிற்கிடந்தாலும், குன்றுமா நிறம். குண்டுமணி யில்லாவிட்டாற், குசுகூட தட்டான் பிழைக்கான். குண்டுமில்லாமல் மருந்துமில்லாமற், குருவிசுடலாமா? குதிகுதியென்பவர்கள், கூடக்குதிப்பார்களா? குதித்துக்குதித்து மாவிடித்தாலும், குந்தாணிக்கொரு கொழுக்கட்டையே. குதித்துக்குதித்து மாவிடித்தாலும், புழுக்கைக்கொரு கொழுக் கட்டையே. குதிரை இருப்பறியும், கொண்ட பெண்சாதி குணமறிவாள், குதிரை இராவுத்தனைத் தள்ளினதுமல்லாமல், குழியுந் தோண்டுகிறதாம். குதிரை குருடானாலும், கொள்ளுதின்பதற்குக் குறையா? குதிரை செத்ததுமல்லாமல், குழிதோண்ட மூன்றுபணம் செல வாச்சது. குதிரை நடைவராமல், கொக்கைய்ப்பறப்பானும் இராவுத்தன். குதிரை நல்லதுதான். சுழி கெட்டது. குதிரைபிடிக்க, சம்மட்டியடிக்க, கூப்பிட்ட குரலுக் கெனென்ன. குதிரையின் கொழுப்பறிந்து, சுவாமி கொம்பு கொடுக்கவில்லை. குதிரையுங்காதம், கிழவியுங்காதம். குதிரையுமேறிக் குதிரைக்குட்டியு, மேறுகிறதா? குதிரை எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடிபாயும். குதிரை ஏற யோகமிருந்தால், கொண்டேற வேணுமா? குதிரை ஏமுமற்கெட்டது. கடன் கேளாமற்கெட்டது. குதிரை ஏறியென்ன, கோணக்கொம்பு வாதியென்ன, வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகுதூரம். குதிரைவால் வீச்சு, குதிரைமட்டும். குதிரை விற்ற, குச்சலியன் போல. குத்திரம், குடியைக்கெடுக்கும், குத்திவடிச்சாலும், சம்பா, குப்பையில் போட்டாலும் தங்கம்.