பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருக்கள் பேரிலாகண, இந்தக்கழியை விழுங்கு. குருடனுக்குக் குருடன், வழிகாட்டினால், இருவருங் குழியில் விழுவார்கள். குருடனும் செவிடனும், கூத்துப்பார்க்கப்போய், குருடன் கூத்தைப்பழித்தான், செவிடன் பாட்டைப் பழித்தான் குருடனும், செவிடனும், கூத்துப்பார்த்தது போல. குருடன் ராசமுழி, முழித்தாற்போல. குருடன் வேண்டுகிறது. கண்பெறத்தானே. குருடன் தண்ணீர்க்குப்போக, எட்டாள் மெனக்கடு. குருடனுக்குப், பாற்சோறிட்டது போல. குருடானாலுங்குதிரை, சிமிட்டுகிறதில் தாட்சியில்லை. குருடுங்குருடுங் குருட்டாட்டமாடி. குழியில் விழுமாறே. குருட்டுக்கண்ணுக்குக் குறுணிமை யிட்டாவதென்னா. குருட்டுக்குதிரைக்குச் சருக்கினது சாக்கு. குருமொழிக்கு இரண்டு. குறுக்கேபேசலாமா? குருவிக்குத்தகுந்த. இராமேசுரம். குருவிக்கூட்டை. குலையக் கலைக்காதே. குருவிக்கூட்டை. கோலாலே கலைக்கிறது. குருவியின் தலையில, பனங்காயை வைத்தாற்போலே. குருவுக்குத் துரோகஞ் செய்தாலும், குடலுக்குத் துரோகஞ் செய்யக்கூடாது. குருவுக்கு மிஞ்சின சீஷன். குருவேஷங் கொண்டவன். குருவாவானா? குலங் குப்பையிலே, பணம் பந்தியிலே. குலஸ்திரி தனி பர்த்தாவையும், பரஸ்திரி தன் மேனியையும் பேணுவார். குலத்தளவேயாகுங் குணம். குலத்துக்கீனம், கோடாலிக்காம்பு. குலமெப்படியோ. குணமப்படி. குலம்புகுந்தும், குறைதீரவில்லை. குலைக்கஞ்சாதவன், பழிக்கஞ்சுவானா? குலைக்கிற நாய், கடிக்கிறது அரிது. குலையாத நாய். குதிகாலைக்கடிக்கும். குழந்தைக்காச்சலும், குண்டன் காச்சலும் பொல்லாது. குழந்தைக்கும் நாய்க்கும். குடிபோகச் சந்தோஷம். குழந்தைப் பட்ணியும், கோயில் பட்ணியுமில்லை. குழந்தையும் தெய்வமும், கொண்டாடின விடத்திலே. குழம்புப்பால் குடிக்கக், குமர கண்டவலிப்பா? 84