பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுப்பணிபுரி காதை

௧௰௭

“ஆசான் பணியிடை ஒய்வே
பெறினும் அமைதியுடன்
பேசா திருந்திலர் பெற்றநல்
லின்பம் பிறர்பெறவே
ஏசாச் சிறப்பின் எழில்ராம1
சாமி எனுமவர்க்குக்
காசாற் பெறவிய லாத

கலையெழில் காட்டினரே.

21



பெண்பாலர் கல்விபெறப் பேரறிவு
பெற்ருெளிரப் பெரிதும் எண்ணிக்
கண்போலும் அவர்தமக்குக் குருகுலமும்
காணவழி கட்டு ரைத்தார்
பண்பாரும் கொப்பளு பட்டியெனும்
பதிவளர்மெய் யப்பர் தம்மால்
நண்பாலே கலைமகள்கல் லூரியென

நாட்டுவித்தார் மணியார் அங்கே.

22



ஒருநாள் மகிபாலன் பட்டிக்குள் ளுற்றார்
மறுநாளும் வந்துசெல மற்றும் மனம்விழையார்
கற்றாழை கள்ளி கருநாகம் புக்குவரும்
புற்றலே எங்கும் பொலிந்திருக்கும்; வான்முகில் தான்

சற்றே பொழியின் சகதி நிறைந்திருக்கும்

5


பற்றாக் குறைக்கங்குப் பள்ளம் படுகுழிகள்;
ஆற்றில் புனலும் அடித்துத் திரண்டுவரும்
சேற்று நிலமாய்அச் சிற்றுார் விளங்கும்;”

1. பண்டிதர் இல்லத்திற்கு எதிராக வசித்து வந்த சி. ராமசாமி செட்டியார்