பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

31

“பாச்சுவையில் குறைகானின் எடுத்துச்சொல்லிப்
பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல்போல
நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக்காட்டி
நன்கடிசில் அமைவதற்குப் பக்குவத்தை
ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகுகாணின்
அடடாஒ எனநமக்கு வியப்புத்
தோன்றும். (4:19)"

பண்டிதமணியின் உலகியலறிவும் நிகரற்றது. நூலறிவுடைய பலர் உலகியலில் யாதுமறியா இயல்பினராய் இருப்பர். கதிரார் அதற்கு மாறாக இருதுருவங்களும் இணையுமாறு வாழ்ந்தவர். அறிவிலும் பதவியிலும் உயர உயரச் செல்வத்திலும் உயர்ந்து விளங்கினர் அவர். வீடு கட்டுவது முதல், வரவுசெலவுக்கணக்குப் பார்ப்பது வரை நன்கறிந்த பல்கலைச் செல்வராக அவர் வாழ்ந்தமையைப் பாவியம் விரித்துக் கூறத் தவறவில்லை. இருவேறு உலகத்தியற்கை என்ற நூற்கணக்கை மாற்றி வைத்தது இவர்திறம் (4:25).

தலைவரை நூன்முழுதும் பாராட்டும் இந்நூல் அவருக்கேற்ற வாழ்க்கைத்துணை, எங்ங்ணம் அவர் உயர்வுக்கெல்லாம் உதவிய அரிய துணையாக அமைந்தது என்பதையும் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றது.

'கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை; கதிர் மணியார் வீட்டிற் கண்டோம்' என்று மதிக்கப்படும் மீளுட்சி அன்னே, கண்ணிறைந்த கணவனெனக் கதிராரின் மதிவிளேத்த மெய்பார்த்து மணந்துகொண்ட மாட்சி, மனம்நெகிழுமாறு விளக்கப்பெற்றுள்ளது. அவ்வன்னையைப் பலவாறு மனமுவந்து பாராட்டும் பாட்டுப்புலவர், 'பெண்மைக்கும் இல்லறத்தின் பெருமைக்கும் மதிப்பளித்தார்; உண்மைக்கும் கதிரேசர் உயர்வுக்கும் வாழ்வளித்தார்' என முத்தாய்ப்பு வைத்துரைப்பது குறிப்பிடற்பாலதாகும்.

நகரத்தார் மரபு

பண்டிதமணியார் நகரத்தார் சமூகத்தில் பிறந்ததனால், இடையிடையே நகரத்தார் நலன்களைப் பாராட்டிக் குறைகளைச் சுட்டும் போக்குக் காப்பியத்தில் நிழலாடுகிறது. மேலும் காப்பியப் பாவலர் செட்டிநாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்து, நகரத்தாரோடு நகரக்காராகக் கலந்துறை