பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

36

படைப்பாளி இடம்பெறும் பாங்கு

சிலப்பதிகாரத்தில் இளங்கோ தாமே ஒரு பாத்திரமாக இடம்பெற்றுத் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்வதுடன், பத்தினித் தெய்வத்தின் பால் தமக்குரிய பத்திமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். கவிஞர் முடியரசன் பண்டிதமணியின் தூண்டுதலால் மேலச்சிவபுரி வ. பழ. சா. பழநியப்பர் உருவாக்கி, அவர் தம்பி அண்ணுமலையாரால் புறந்தரப்பட்டு, இன்று வரை அவர்களின் மக்கள் சாமிநாதர், சிதம்பரஞர் மற்றும் பெயரர் சீனி என்ற பழநியப்பர் போல அனைவராலும் காக்கப்பட்டுவரும் சன்மார்க்க சபையில் தொடக்கக்கல்வி முதல் புலமைப்பட்டம் வரை பயின்றவர். மேலைச்சிவபுரிக்கு வந்த தமிழ்ச்சான்றோர்களின் உரைநலங்களைக் கேட்டுணர்ந்தவர். பண்டிதமணியின் சொற்பொழிவுகளைக் கேட்டும், சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா அவர்களுடன் பண்டிதமணி நோயுற்ற போது சென்று கண்டும் இத்தகைய நிகழ்ச்சிகளால் இவ் வரலாற்றிலும் சிறிது இடம்பெற்றவர். எனவே அவர் தம் உள்ளத்துணர்வுகளே வடிக்கும்போது தம்மை மறந்து பாடுகிரு.ர். சன்மார்க்கசபைத்தாயை நினைந்து போற்றுவ. பழ. சா. குடும்பத்தாரை வாயார, மனதாரப் புகழ்கின்றார்.

“செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள்
வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார்
வ. பழ. சா. பழநியப்பர் ஒருவ ராவர் (3.8)

என்று பழநியப்பரையும் அவர் தம்பி அண்ணும்லையையும் பெருமிதம் தோன்றக் குறிப்பிடுகிறார்.

பழநியப்பரின் பண்பு நலங்களை அடுக்கியுரைத்துவிட்டு,

“கற்றுனர்ந்தார் நல்லுறவும் கலந்தாடிக்
களிக்கின்ற செவியுணர்வும் வல்லார் வந்து
சொற்றதிரு முறை நூல்கள் செவிமடுத்துச்
சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்குசேரப்
பெற்ருெளிரும் பழனியப்பர்-" (3:10)

என்று இயன்மொழியாய் இசைக்கின்ருர் முடியரசர். சன்மார்க்கசபையில் கற்றவர்கள் துலக்கமுறக் கற்றதனால் இன்று நாடறிந்த பேராசிரியர்களாய், கவியரசர்களாய்த்