பக்கம்:ஊரார்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 சாமியாரைக் கண்டதும் அந்தப் பழைய டிரைவர் ஓடி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்ருன். போர்ட்டிகோ அருகில் ஃபெளண்ட்டன் பீச்சிக் கொண்டிருந்தது. குட்டி பாமரேனியன் வாலே ஆட்டிக் கொண்டே கீச்சுக் குரலில் குரைத்தது. அரைத் துரக்கத் திலிருந்த அல்சேஷன் ஒடி வந்து சாமியாரை மோப்பம் பார்த்து விட்டுப் போயிற்று. உள்ளேயிருந்த முதலியார், சாமியாரைப் பார்த்துவிட்டு வாசலுக்கு விரைந்து வந்தார். "எப்ப வந்தீங்க? லெட்டர் போடக் கூடாதா? ஸ்டேஷ னுக்குக் கார் அனுப்பியிருப்பேனே என்ருர். "இந்தக் கட்டைக்கு அது வளக்க மில்லையே. திடீர்னு: நெனச்சேன். புறப்பட்டு வந்துட்டேன். எல்லாரும் செளக்கியமா? அம்மாவுக்குதான் உடம்பு சரியில்லை. எனக்கும் மனக்கவலை அதிகமாயிடுச்சு. ப்ளட் ப்ரெஷர் இருக்குது. பிஸினஸ் சரியில்லே. மூத்த மகளுக்குக் கல்யாணம் செய்யனும். பல இடம் பார்த்துட்டேன். ஒண்ணும் சரிப்பட்டு வர்லே. சாமியார்தான் ஜாதகம் பார்த்துச் சொல்லணும். அம்மாவுக்கும் ஏதாவது மருந்து கொடுத் துட்டுப் போகணும். உங்களைப் பார்க்கணும்னு நானே அவ கிட்டே சொல்விக் கிட்டிருந்தேன். தெய்வமே வந்துட்டுது... என்ருர். "மகள் நட்சத்திரம் என்ன சொன்னிங்க? 'மூலம்...” - "ஜாதகத்தை எடுத்துட்டு வாங்க பாப்பம்... அம்மாவுக்கு?...: * , 'அம்மாவுக்கு மூலம்...:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/40&oldid=758724" இருந்து மீள்விக்கப்பட்டது